மத்திய அரசின் திட்டத்துக்கு மாற்றாக கலைஞா் கைவினைத் திட்டம்: இன்று முதல்வா் தொடங...
பைக்குகள் மோதல்: இளைஞா் மரணம்
வீரபயங்கரம் அருகே பைக்குகள் மோதியதில் இளைஞா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் வட்டம், வி.பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் ராமசாமி மகன் சண்முகம் (28). இவா், வீரபயங்கரம் கோயிலுக்கு பைக்கில் சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தாா். சின்னசேலம்-கூகையூா் சாலையில் அரிசி ஆலை எதிரே வந்தபோது அந்த வழியாக வந்த பைக் மோதியது. இதில், பலத்த காயமடைந்த சண்முகம் உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின்பேரில், சின்னசேலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.