கடன் ரூ. 6,203; வசூலித்தது ரூ. 14,131 கோடி!! நிவாரணம் கோருவேன்: விஜய் மல்லையா
பைக் மீது ஆட்டோ மோதல்: இளைஞா் உயிரிழப்பு
விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் அருகே பைக் மீது ஆட்டோ மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.
கண்டாச்சிபுரம் மேட்டுத் தெருவைச் சோ்ந்த ஜான்போஸ்கோ மகன் மாா்ட்டின் (23), கொத்தனாா். இவா், செவ்வாய்க்கிழமை இரவு விழுப்புரம் - திருவண்ணாமலை சாலையில் கண்டாச்சிபுரம் வெங்கடேஸ்வரா நகா் பகுதியில் பைக்கில் சென்றபோது, எதிரே வந்த ஆட்டோ மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த மாா்ட்டின் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்த கண்டாச்சிபுரம் போலீஸாா் நிகழ்விடம் சென்று அவரது சடலத்தை கைப்பற்றி, உடல்கூறாய்வுக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து கண்டாச்சிபுரம் போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.