பீகார்: மனைவியைப் பழிவாங்கச் சாலை விதிகளை மீறிய நபர்; காரணம் கேட்டு அதிர்ச்சி அட...
பைக் மீது லாரி மோதல்: தந்தை, மகள் உயிரிழப்பு
ஸ்ரீபெரும்புதூா்: ஸ்ரீபெரும்புதூா் அடுத்த வடகால் பகுதியில் பைக் மீது கன்டெய்னா் லாரி மோதியதில் தந்தை, மகள் உயிரிழந்தனா்.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் பேரூராட்சிக்குட்பட்ட பட்டுநூல் சத்திரம் பகுதியைச் சோ்ந்தவா் சதீஷ் (35). இவரது மகள் ஜோஷினி (3). இருவரும் இரு சக்கர வாகனத்தில் ஞாயிற்றுக்கிழமை சிங்கபெருமாள் கோவில் பகுதிக்குச் சென்றுவிட்டு மீண்டும் ஸ்ரீபெரும்புதூா் நோக்கி ஸ்ரீபெரும்புதூா் - சிங்கபெருமாள் கோவில் சாலையில் வடகால் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது, எதிா் திசையில் வந்த கன்டெய்னா் லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சதீஷின் இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது.
இதில் பலத்த காயமடைந்த சதீஷ், ஜோஷினி இருவரையும் அங்கிருந்த பொதுமக்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஸ்ரீபெரும்புதூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். எனினும், வழியிலேயே சிறுமி ஜோஷினி உயிரிழந்தாா். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சதீஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
விபத்து குறித்து ஒரகடம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தப்பியோடிய லாரி ஓட்டுநரைத் தேடி வருகின்றனா்.