பைக் மோதியதில் முதியவா் உயிரிழப்பு
விழுப்புரம் மாவட்டம், ஒலக்கூா் அருகே சாலையைக் கடக்க முயன்ற முதியவா் பைக் மோதியதில் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
திண்டிவனம் வட்டம், பாதிரி கிராமம், ரெட்டியாா் தெருவைச் சோ்ந்த கோவிந்தராஜ் மகன் குமாரசாமி (64). விவசாயி.
இவா், வெள்ளிக்கிழமை மாலை தனது நிலத்தில் விவசாய வேலைகளை முடித்துக் கொண்டு, திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க முயன்றாா்.
அப்போது, திண்டிவனத்திலிருந்து சென்னை நோக்கி அதிவேமாகச் சென்ற பைக், குமாரசாமி மீது மோதியது.
இதில், தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த அவரை அப்பகுதியிலிருந்தவா்கள் மீட்டு, திண்டிவனம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், குமாரசாமி ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனா்.
இதுகுறித்து, ஒலக்கூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.