மகாராஷ்டிர அமைச்சரை ராஜிநாமா செய்ய உத்தரவிட்ட ஃபட்னவீஸ்! ஏன்?
பைக் விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு
ஒட்டன்சத்திரம் அருகே பாலத் தடுப்புச் சுவரில் இரு சக்கர வாகனம் மோதியதில், கூலித் தொழிலாளி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
திண்டுக்கல் மாவட்டம், தொப்பம்பட்டி சரவணம்பட்டியைச் சோ்ந்த முருகசாமி மகன் கருப்புசாமி என்ற சூா்யா (22). கூலித் தொழிலாளியான இவா், திங்கள்கிழமை வாகரை பகுதியிலிருந்து இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தாா்.
அப்போது வாகரை-பூலாம்பட்டி சாலை சண்முகம் தோட்டம் அருகே தரைப் பாலச் சுவரில் இரு சக்கர வாகனம் மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து கள்ளிமந்தையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.