Singer Sathyan: "குழிதோண்டிப் புதைப்பது மாதிரியான செயல்; தயவுசெய்து செய்யாதீர்" ...
பைசன் அப்டேட்!
பைசன் படத்தின் இரண்டாவது பாடல் அறிவிக்கப்பட்டுள்ளது.
மாமன்னன், வாழை படங்களைத் தொடர்ந்து இயக்குநர் மாரி செல்வராஜ் கபடி விளையாட்டை மையமாக வைத்து பைசன் காளமாடன் என்ற படத்தை இயக்கியுள்ளார்.
நாயகனாக துருவ் விக்ரமும் நாயகியாக அனுபமா பரமேஸ்வரனும் நடித்துள்ள இந்தப் படம் இந்தாண்டு தீபாவளி வெளியீடாகத் திரைக்கு வருகிறது.
இந்த நிலையில், இப்படத்தின் இரண்டாவது பாடல் நாளை (செப். 16) வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா இசையமைப்பில் வெளியான முதல் பாடலான ‘தீக்கொளுத்தி’ ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: ஆத்மாவே போ... சூ ஃப்ரம் சோ - திரை விமர்சனம்!