சிதம்பரம் திருச்சித்திரக்கூடம் கோவிந்தராஜப் பெருமாள் கோயிலில் பரமபத வாசல் திறப்ப...
பொங்கலுக்கு ஊருக்குப் போறீங்களா? இந்த வாட்ஸ்ஆப் சேவை பற்றி தெரியுமா?
தமிழக மக்கள் பலரும் தற்போது சிந்தித்துக் கொண்டிருப்பது பொங்கலுக்கு ஊருக்குப் போவது பற்றித்தான். அப்படி ரயிலில் பொங்கலுக்கு ஊருக்குப் போகும்போது, இந்த வாட்ஸ்ஆப் சேவை பற்றி நிச்சயம் தெரிந்துகொள்ள வேண்டும்.
ரயில் டிக்கெட் உறுதி செய்யப்பட்டவர்கள், எப்படி ரயில் நிலையம் செல்வது, அங்கிருந்து வீட்டுக்கு செல்வது பற்றியும், டிக்கெட் உறுதியாகாதவர்களுக்கு எப்போது உறுதியாகும், இருக்கையாவது கிடைக்குமா என்பதும்தான் யோசனையாக இருக்கும்.
ரயில் பயணிகளுக்கு என இந்திய ரயில்வே ஏற்படுத்தியிருக்கும் வாட்ஸ்ஆப் சேவை நிச்சயம் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும். இதில், ஒருவர் பிஎன்ஆர் நிலை அறிவது முதல் உணவு ஆர்டர் செய்வது வரை அனைத்தையும் பெறலாம்.
ஏற்கனவே இருக்கும் சேவைதான் என்றாலும், பொங்கலுக்கு ஊருக்குச் செல்வபவர்கள் பயன்படுத்துவதற்கு இது ஏதுவாக இருக்கும் என்று இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.
தற்போது நாட்டில் அதிகமானோர் பயன்படுத்தும் செயலியாக இருக்கும் வாட்ஸ்ஆப் மூலமாகவே பிஎன்ஆர் ஸ்டேட்டஸ் அறிந்துகொள்வது என்பது அவ்வளவு எளிதாக இருக்கும் என்பது பாமர மக்களுக்குத்தான் தெரியும்.
ரயில் பயணத்தை மேலும் சிறப்பானதாக மாற்றுவதற்கு இந்த சேவை பயன்படும் என்று நாங்கள் சொல்லவில்லை இந்திய ரயில்வே சொல்கிறது.
இந்த சேவையைப் பெற, ஒருவர் தனது செல்போனில் 98811-93322 என்ற எண்ணை இந்திய ரயில்வே என்று சேமித்து வைத்துக் கொள்ளலாம்.
இதையும் படிக்க.. குடியரசுத் தலைவர் முதல்.. எம்எல்ஏ வரை.. மாத ஊதியம் எவ்வளவு?
இதில், Hi என்று பதிவிட்டால், அதில் உங்களுக்கு எந்தவிதமான சேவை தேவைப்படும் என்ற பட்டியல் வரும். அதில் உங்கள் பிஎன்ஆர் எண் அளித்தால் அது தொடர்பான தகவல்கள் கிடைக்கும்.
இதுபோல, அடுத்த ரயில் நிலையத்தில் உணவு கிடைக்கும் வகையில் உணவு ஆர்டர் செய்யலாம், தற்போது ரயில் எங்கிருக்கிறது, டிக்கெட் முன்பதிவு செய்வது, ரயில் பெட்டி எங்கிருக்கிறது என்பதை அறிவது, புகார்களைப் பதிவு செய்வது என பல்வேறு சேவைகளையு இதில் பெறலாம்.