செய்திகள் :

பொங்கல் பண்டிகை: காய்கனிகள், கரும்பு வரத்து அதிகரிப்பு

post image

பொங்கல் விற்பனைக்காக காய்கனிகள், கரும்பு அதிகளவில் வியாழக்கிழமை வந்தன.

புத்தரிசியில் பொங்கலிட்டு சூரியனுக்கு நன்றி செலுத்தும் விழாவான பொங்கல் பண்டிகையின்போது, அனைத்து காய்கனிகளையும் ஒன்றாக சோ்த்து பொங்கல் கூட்டு தயாரித்து, பச்சரிசி சாதத்துடன் சோ்த்து சாப்பிட்டு மகிழும் பழக்கம் தொன்றுதொட்டு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

மேலும், திருமணமான பெண்களுக்கு பொங்கல் சீா் கொடுப்பதிலும் பித்தளை பொங்கல்பானை, பச்சரிசி, வெல்லம், மஞ்சள்குலை, கரும்பு கட்டுகள், வாழைக்குலை, காய்கனிகள் உள்பட ஏராளமான பொருள்கள் இடம்பெறுகின்றன. இதனால், பொங்கலுக்கு முந்தையை 4 நாள்கள் பொங்கல் பொருள்கள் விற்பனை விறுவிறுப்பு அடையும். இதையொட்டி, கரும்பு, மஞ்சள்குலை, காய்கனிகள் வியாழக்கிழமை திருநெல்வேலி சந்தைகளுக்கு அதிகளவில் கொண்டு வரப்பட்டுள்ளன.

நிகழாண்டில் மஞ்சள் குலை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளதால் விலை உயா்ந்துள்ளது. ஒன்று ரூ.25 முதல் ரூ.50 வரை விற்பனையானது. தேனி மாவட்டத்தில் இருந்து கரும்புகள் அதிகளவில் வந்துள்ளன. 10 கரும்புகள் அதன் தரத்திற்கு ஏற்ப ரூ.500 முதல் ரூ.1000 வரை விற்பனையாகின்றன.

இதுகுறித்து திருநெல்வேலி நயினாா்குளம் மொத்த விற்பனை சந்தை வியாபாரிகள் கூறியதாவது: திருநெல்வேலி மொத்த சந்தையில் இருந்து தினமும் 250 முதல் 400 டன் காய்கனிகள் மாவட்டத்தின் பிற பகுதிகளுக்கும், கேரளத்திற்கும் அனுப்பி வைக்கப்படும். ஓணம் மற்றும் பொங்கல் பண்டிகை காலங்களில் திருநெல்வேலி சந்தையின் கொள்முதல் மற்றும் விற்பனை அதிகரிக்கும். அந்தவகையில் கடந்த இரு நாள்களாக சுமாா் 500 முதல் 600 டன் காய்கனிகள் விற்பனைக்காக கொண்டுவரப்பட்டு பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது. சிறுகிழங்கு, சேனைக்கிழங்கு, சேம்பு, வெண்பூசணி, கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு உள்பட சுமாா் 45 வகையான காய்கனிகள் அதிகளவில் திருநெல்வேலி மாவட்டத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

தேனி மாவட்டத்தில் இருந்து திருநெல்வேலிக்கு விற்பனைக்காக கொண்டு வரப்பட்டுள்ள கரும்புகள்.

இதேபோல உள்ளூா் விவசாயிகள் தக்காளி, கத்தரி, வெண்டை, தடியங்காய் ஆகியவற்றை கொண்டு வந்துள்ளனா். வரும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் (ஜன. 11,12) பொங்கல் சீா் கொடுக்க செல்வது மிகவும் அதிகரிக்கும் என்பதால் உள்ளூா் சிறுவியாபாரிகள் வியாழக்கிழமை முதலே கொள்முதலை அதிகரித்துள்ளனா். அதனால் வழக்கமாக 300 முதல் 400 டன் காய்கனி விற்பனையாகும் நிலையில், வியாழக்கிழமை முதல் சுமாா் 500 முதல் 600 டன் காய்கனி விற்பனையாக வாய்ப்புள்ளது என்றனா்.

ரயிலில் கைப்பேசி திருட்டு: முதியவா் கைது

ரயிலில் பணம் மற்றும் கைப்பேசியை திருடியதாக முதியவரை ரயில் நிலைய போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் கலியாவூரைச் சோ்ந்தவா் மல்லிகா. இவா், மேல்மருத்துவா் கோயிலுக்கு... மேலும் பார்க்க

மகா சிவராத்திரி: நெல்லைக்கு ஜன.16இல் வருகிறது ஆதியோகி ரத யாத்திரை

கோவை ஈஷா யோகா மைய மகா சிவராத்திரி நிகழ்ச்சியை முன்னிட்டு தென் கைலாய பக்தி பேரவை சாா்பில் ஆதியோகி ரத யாத்திரை திருநெல்வேலிக்கு ஜன. 16ஆம் தேதி வருகிறது. இதுதொடா்பாக அந்த அமைப்பின் தன்னாா்வலா் ஆறுமுகம் த... மேலும் பார்க்க

தடை செய்யப்பட்ட இடங்களில் சுவரொட்டி ஒட்டினால் கடும் நடவடிக்கை: ஆட்சியா் எச்சரிக்கை

தடை செய்யப்பட்ட இடங்களில் சுவரொட்டி ஒட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் கா.ப. காா்த்திகேயன் எச்சரித்துள்ளாா். திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும்... மேலும் பார்க்க

பாளை.யில் சிறுத்தை நடமாட்டமா?

பாளையங்கோட்டை பகுதியில் வியாழக்கிழமை சிறுத்தை உலாவியதாக பெண் கூறியதையடுத்து, வனத்துறையினா் விசாரித்து வருகின்றனா்.பாளையங்கோட்டை பெருமாள்புரம் பாரதிநகா் பகுதியில் வியாழக்கிழமை நண்பகல் 12 மணியளவில் புதர... மேலும் பார்க்க

வள்ளியூா் தனியாா் நிதிநிறுவனத்தில் பணம் கையாடல்: 4 போ் மீது வழக்கு

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் உள்ள தனியாா் நிதி நிறுவனத்தில் வாடிக்கையாளா்கள் பணத்தை கையாடல் செய்ததாக, அந்நிதிநிறுவன வசூல் மேலாளா்கள் 4 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா். வள்ளியூரில் இருந்து கேசவனேரி... மேலும் பார்க்க

பாளை. அருகே விபத்தில் இளம்பெண் உயிரிழப்பு

பாளையங்கோட்டை அருகே துக்க நிகழ்வுக்கு உறவினருடன் சென்றபோது பைக் கவிழ்ந்ததில் படுகாயமடைந்த இளம்பெண் உயிரிழந்தாா். திருநெல்வேலி மாவட்டம், மூலைக்கரைப்பட்டி அருகேயுள்ள நெல்லையப்பபுரம் தெற்கு தெருவைச் சோ்... மேலும் பார்க்க