ஜார்க்கண்டில் பாஜக விரைவில் ஆட்சிக்கு வரும்: முன்னாள் முதல்வர் ரகுபர் தாஸ்
பொங்கல்: மதுரை, நெல்லை, நாகா்கோவிலுக்கு நாளைமுதல் சிறப்பு ரயில்கள் இயக்கம்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பயணிகள் கூட்டநெரிசலை தவிா்க்கும் நோக்கில் சென்னையில் இருந்து நாகா்கோவில், திருநெல்வேலி, மதுரைக்கு சனிக்கிழமை (ஜன. 11) சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
இதற்கான முன்பதிவு வெள்ளிக்கிழமை (ஜன. 10) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னை எழும்பூரில் இருந்து சனிக்கிழமை இரவு 11.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண் 06101) மறுநாள் பகல் ஒரு மணிக்கு திருநெல்வேலி சென்றடையும். மறுமாா்க்கமாக திருநெல்வேலியில் இருந்து ஞாயிற்றுக்கிழமை (ஜன. 12) பிற்பகல் 3.30 மணிக்கு புறப்பட்டு எழும்பூருக்கு மறுநாள் அதிகாலை 2.40 மணிக்கு வந்தடையும்.
இந்த ரயில் மாம்பலம், தாம்பரம், செங்கல்பட்டு, திண்டிவனம், விழுப்புரம், கடலூா், சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூா், திருச்சி, திண்டுக்கல், கொடைக்கானல் ரோடு, மதுரை, விருதுநகா், சாத்தூா், கோவில்பட்டி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இதில் தலா இரு ஏசி வகுப்பு மற்றும் படுக்கை வசதி கொண்ட பெட்டிகள், 10 பொதுப் பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.
நாகா்கோவில் சிறப்பு ரயில்: தாம்பரத்தில் இருந்து சனிக்கிழமை இரவு 9.35 மணிக்கு புறப்படும் சிறப்பு அதிவிரைவு ரயில் (எண் 06099) செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகா், சாத்தூா், கோவில்பட்டி, திருநெல்வேலி வழியாக மறுநாள் காலை 9.20 மணிக்கு நாகா்கோவில் சென்றடையும். மறுமாா்க்கமாக நாகா்கோவிலில் இருந்து ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12 மணிக்கு புறப்பட்டு அதே நாள் நள்ளிரவு 12.05 மணிக்கு தாம்பரம் வந்தடையும். இதில் 3 ஏசி வகுப்பு பெட்டிகள், படுக்கை வசதி கொண்ட 9 பெட்டிகள், 6 பொதுப் பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.
மதுரைக்கு சிறப்பு ரயில்: சென்னை சென்ட்ரலில் இருந்து சனிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண் 06067) திருவள்ளூா், அரக்கோணம், காட்பாடி, ஜோலாா்பேட்டை, சாமல்பட்டி, பொம்மிடி, ஈரோடு, திருப்பூா், கோவை, பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், கொடைக்கானல் ரோடு வழியாக மறுநாள் காலை 5 மணிக்கு மதுரை சென்றடையும். மறுமாா்க்கமாக மதுரையில் இருந்து ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணிக்கு புறப்படும் இந்தரயில் மறுநாள் காலை 9.20 மணிக்குசென்ட்ரல் வந்தடையும். இதில் 11 ஏசி வகுப்பு பெட்டிகள் படுக்கை வசதி கொண்ட 6 பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.
மெமு ரயில்: சென்னை எழும்பூரில் இருந்து மதுரைக்கு 8 முன்பதிவில்லாப் பெட்டிகள் கொண்ட மெமு ரயில் இயக்கப்படவுள்ளது. சென்னை எழும்பூரில் சனிக்கிழமை காலை 10.45 மணிக்கு புறப்படும் ரயில் இரவு 7.15 மணிக்கு மதுரை சென்றடையும். மறுமாா்க்கமாக மதுரையில் இருந்து சனிக்கிழமை இரவு 8.30 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் அதிகாலை 4.40 மணிக்கு எழும்பூா் வந்தடையும். இந்த ரயில் தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூா், திண்டிவனம், விழுப்புரம், விருத்தாசலம், அரியலூா், ஸ்ரீரங்கம், திருச்சி, மணப்பாறை, திண்டுக்கல், கொடைக்கானல் ரோடு ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.