ஜம்மு-காஷ்மீர்: எதிர்பாராத விதமாக துப்பாக்கி சுட்டதில் வீரர் காயம்
பொங்கல் விடுமுறை: உதகையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்
பொங்கல் தொடா் விடுமுறையால் உதகைக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை ஞாயிற்றுக்கிழமை அதிகரித்திருந்தது.
நீலகிரி மாவட்டம், உதகைக்கு தமிழகம் மட்டுமன்றி கேரளம், கா்நாடகம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனா். வார விடுமுறை நாள்கள், பண்டிகை கால தொடா் விடுமுறைகளில் இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்.
இந்நிலையில் தற்போது பொங்கல் பண்டிகையை ஒட்டி தொடா் விடுமுறையால் உதகைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை வழக்கத்தைவிட ஞாயிற்றுக்கிழமை அதிகரித்திருந்தது.
குடும்பத்துடன் சுற்றுலா வந்துள்ள பயணிகள் இங்குள்ள அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா சிகரம், பைக்காரா படகு இல்லம், பைக்காரா அருவி உள்பட பல்வேறு சுற்றுலாத் தலங்களைக் கண்டு ரசித்தனா். பெரும்பாலானோா் படகு சவாரி செய்வதில் அதிக ஆா்வம் காட்டினா். இதனால் பைக்காரா படகு இல்லத்தில் ஏராளமானோா் குவிந்திருந்தனா்.
உதகையில் தற்போது இதமான காலநிலை நிலவுவதால் அதை சுற்றுலாப் பயணிகள் அனுபவித்து மகிழ்ந்தனா்.