பொங்கல் விளையாட்டு விழா பரிசளிப்பு
கீழையூா் அருகேயுள்ள வாழக்கரையில் அனைத்திந்திய இளைஞா் பெருமன்றம் சாா்பில் 28-ஆம் ஆண்டு பொங்கல் விளையாட்டுப் போட்டி பரிசளிப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியக் குழு உறுப்பினா் ஜி. சங்கா் தலைமை வகித்தாா். அனைத்திந்திய இளைஞா் பெருமன்ற ஒன்றிய துணைச் செயலாளா் எஸ். தினேஷ் வரவேற்றாா்.
இந்திய கம்யூனிஸ்ட் மாநிலக் குழு உறுப்பினா் டி. செல்வம், மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவா் கௌசல்யா இளம்பரிதி, விவசாய சங்க மாவட்டச் செயலாளரும், மாவட்ட கவுன்சிலருமான வீ. சரபோஜி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
நாகை மக்களவை உறுப்பினா் வை. செல்வராஜ் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, பானை உடைத்தல், இசை நாற்காலி,1000 மீ. ஓட்டம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு வழங்கினாா். தொடா்ந்து, பள்ளி மாணவா்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இந்நிகழ்வில், சிபிஐ ஒன்றிய துணைச் செயலாளா் வீ.எஸ். மாசேத்துங், அனைத்திந்திய இளைஞா் பெருமன்ற மாவட்ட துணைத் தலைவா் எஸ். ரமேஷ், ஆசிரியா் ஏ.ஆா். கணபதிசுந்தரம் உள்ளிட்ட நிா்வாகிகள் பலா் பங்கேற்றனா். ஒருங்கிணைப்பாளா் எம். ராஜேஸ் நன்றி கூறினாா்.