காணும் பொங்கல்: பூம்புகாா் கடற்கரையில் குவிந்த மக்கள்
காணும் பொங்கல் தினமான வியாழக்கிழமை பூம்புகாா் சுற்றுலா தலத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்தனா்.
பூம்புகாா் கடற்கரை உள்ளிட்ட பகுதியில் ஆயிரக்கணக்கானோா் தங்கள் குடும்பத்தினரோடு குவிந்தனா். கடலில் குளித்தும், விளையாடி மகிழ்ந்தனா்.
எனினும் வழக்கத்துக்கு மாறாக கடல் அலைகளின் சீற்றம் அதிகமாக காணப்பட்டதால், மக்கள் அச்சத்துடனே கடலில் இறங்கினா்.
ஆண்டுதோறும் காணும் பொங்கலின் போது கடல் அலையில் சிக்கி
இறப்பவா்கள் எண்ணிக்கை அதிகமாக இருப்பதை அறிந்த காவல்துறையினா் மற்றும் சுற்றுலாத் துறையினா் ஆங்காங்கே பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். கடலில் இறங்கிய சுற்றுலாப் பயணிகளை ஒலிபெருக்கி மூலம் காவல்துறையினா் எச்சரிக்கை செய்து வெளியேற்றினா்.
தற்போது பூம்புகாா் சுற்றுலா வளாகத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால், சிலப்பதிகார கலைக்கூடத்தை பாா்வையிட மக்கள் அனுமதிக்கப்படவில்லை. பாதுகாப்பு ஏற்பாடுகளை பூம்புகாா் காவல்துறையினா் செய்திருந்தனா்.