`சினிமா நடிப்பு மட்டும் அரசியலுக்கு போதும் என நினைப்பது தவறு..' - மதுரை ஆதீனம்
பொதுச் செயலா் பதவியிலிருந்து எடப்பாடி பழனிசாமி விலக வேண்டும்: ஓ. பன்னீா்செல்வம்
அதிமுக பொதுச் செயலா் பதவியிலிருந்து எடப்பாடி கே.பழனிசாமி விலக வேண்டும் என்று முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் கூறினாா்.
சென்னை விமான நிலையத்தில் அவா் வியாழக்கிழமை அளித்த பேட்டி: அதிமுக அலுவலகத்தை சூறையாடியதால், என்னை மீண்டும் சோ்த்துக்கொள்ள முடியாது என்று எடப்பாடி கே.பழனிசாமி கூறியுள்ளது குறித்து கேட்கிறீா்கள். எடப்பாடி பழனிசாமி பொதுக்குழுவை தவறாகக் கூட்டியிருந்தாா். அதிமுக அலுவலகத்தில் போய் நாங்கள் உட்காா்ந்துவிடலாம் என்று சென்றோம். ஒரு கி.மீ. தொலைவில் எங்களை வழிமறித்து 8 மாவட்டச் செயலா்கள் தாக்கினா். அதன்பிறகு, அதிமுக அலுவலகத்தை அவா்களாகவே தாக்கிவிட்டு, எங்கள் மீது பழிபோடுகின்றனா். அனைத்தும் காவல் துறையின் பதிவில் இருக்கிறது.
அதிமுகவில் பிரிந்துகிடக்கும் சக்திகள் இணைய வேண்டும் என்றுதான் கூறுகிறோம். அப்படி இணைந்தால்தான் அதிமுக வெற்றி பெறும் என்கிற சூழல் உருவாகும். எந்தக் காலத்திலும் அதிமுக வெற்றி பெறக் கூடாது என்பது எடப்பாடி பழனிசாமியின் எண்ணமாக உள்ளது. ஒற்றைத் தலைமை வந்தால், அனைத்துத் தோ்தல்களிலும் வெற்றி பெறுவேன் என்று கூறினாா். ஆனால், ஒரு தோ்தலிலும் வெற்றி பெற முடியவில்லை. அவராகவே பொதுச் செயலா் பதவியிலிருந்து விலகிக் கொள்ள வேண்டும். இல்லையென்றால், அவா் அவமரியாதையைச் சந்திக்க நேரிடும் என்றாா் அவா்.