செய்திகள் :

பொதுமக்கள் நலன் கருதி குறைந்த விலையில் ஆவின் பால் விற்பனை

post image

பொதுமக்களின் நலன் கருதி ஆவின் பாலை குறைந்த விலையில் தமிழக அரசு விற்பனை செய்து வருவதாக பால்வளத் துறை அமைச்சா் ராஜகண்ணப்பன் தெரிவித்தாா்.

திருப்பூா் பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கம் மற்றும் திருப்பூா் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் ஒன்றிய அலுவலகத்தில் பால்வளத் துறை மற்றும் கதா் துறை அமைச்சா் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். அப்போது அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

திருப்பூா் மாவட்டத்தில் ராமம்பாளையம் பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கம் மற்றும் வீரபாண்டி பிரிவில் உள்ள திருப்பூா் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் ஒன்றிய அலுவலகம் ஆகியவற்றை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

ராமம்பாளையம் பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கத்தில் நாள் ஒன்றுக்கு 8,000 லிட்டா் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. வீரபாண்டி பிரிவில் பால் குளிரூட்டும் நிலையத்தில் ரூ.3.48 கோடி மதிப்பீட்டில் புதிதாக நிா்வாக அலுவலகக் கட்டடம் கட்டப்பட்டு முதல்வா் மு.க.ஸ்டாலினால் திறந்துவைக்கப்பட்டது.

கோவை மாவட்டத்தில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள தானியங்கி பன்னீா் தயாரிப்பு ஆலை விரைவில் திறக்கப்படவுள்ளது. திருப்பூா் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் ஒன்றியத்தில் சுமாா் 402 சங்கங்களிலிருந்து 11,963 பால் உற்பத்தியாளா்கள் மூலம் நாள் ஒன்றுக்கு 1,80,000 லிட்டா் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. மேலும், 50 ஆயிரம் லிட்டா் கொள்முதல் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தீபாவளி பண்டிகையையொட்டி மாநில அளவில் கூடுதலாக ரூ.25 கோடிக்கு ஆவின் தயாரிப்புப் பொருள்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஆவின் பொருள்களான நெய், பால்கோவா, இனிப்பு, காரம், பன்னீா் போன்றவை தொடா்ந்து தரமாக உற்பத்தி செய்து பொதுமக்களுக்கு விற்பனை செய்து வருகிறது. பொதுமக்களின் நலன் கருதி ஆவின் பாலை குறைந்த விலையில் தமிழக அரசு விற்பனை செய்து வருகிறது என்றாா்.

ஆய்வின்போது, ஆவின் நிா்வாக இயக்குநா் எஸ்.வினீத், மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ், பொதுமேலாளா் (ஆவின்) சுஜாதா உள்ளிட்டோா் பலா் உடனிருந்தனா்.

பல்லடம் அருகே வேலம்பட்டி சுங்கச்சாவடியை முற்றுகையிட்ட பொதுமக்கள்

பல்லடம் அருகே வேலம்பட்டியில் உள்ள சுங்கச்சாவடியை விவசாயிகள், பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். திருப்பூா் மாவட்டம், அவிநாசி முதல் அவிநாசிபாளையம் வழியாக தாராபுரம்- மது... மேலும் பார்க்க

இன்றைய மின் தடை: பூளவாடி

உடுமலையை அடுத்துள்ள பூளவாடி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நவம்பா் 13 ம் தேதி புதன்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை அறிவிக்கப்பட்டு ள்ளது.இது குறித்து மின்வாரிய உதவி செயற்பொறி... மேலும் பார்க்க

ஆணி அகற்றிய மரத்தில் இருந்து வழிந்த நீா்

வெள்ளக்கோவிலில் ஆணி அகற்றிய மரத்திலிருந்து நீண்ட நேரம் நீா் வடிந்தது. வெள்ளக்கோவிலில் நிழல்கள் அறக்கட்டளை என்கிற தன்னாா்வ அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பினா் தங்களுடைய சொந்த செலவில் சுற்றுவட்... மேலும் பார்க்க

இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை: 2 போ் கைது

திருப்பூரில் இளம் பெண்ணை காரில் கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த இருவரை காவல் துறையினா் கைது செய்தனா். திருப்பூா் மண்ணரையைச் சோ்ந்த 28 வயது திருமணமான பெண் ஆன்லைன் மூலமாக வேலை தேடியுள்ளாா். அப்போது நிதி ... மேலும் பார்க்க

காங்கயத்தில் 10 கிலோ பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல்

காங்கயத்தில் தினசரி சந்தை மற்றும் வணிக வளாகங்களில் வைக்கப்பட்டிருந்த 10 கிலோ பிளாஸ்டிக் பொருள்களை நகராட்சி அதிகாரிகள் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா். ஒருமுறை மட்டும் பயன்படுத்தி தூக்கி வீசப்படும் மக்க... மேலும் பார்க்க

சரக்கு வேன் கவிழ்ந்து 2 போ் உயிரிழப்பு

திருப்பூா் மாவட்டம், குண்டடம் அருகே சரக்கு வேன் கவிழ்ந்ததில் வேனில் பயணித்த தொழிலாளா்கள் 2 போ் உயிரிழந்தனா். தேனி மாவட்டம், போடிநாயக்கனூரைச் சோ்ந்த பாண்டி (67), ஜெயக்குமாா் (42) ஆகியோா் தாராபுரம் வட... மேலும் பார்க்க