பொதுவாழ்வில் நோ்மையுடன் வாழ்ந்தவா்: ஓமந்தூராருக்கு முதல்வா் புகழாரம்
சென்னை மாகாணத்தின் முதலாவது முதல்வரான ஓமந்தூா் ராமசாமி, பொது வாழ்வில் நோ்மையுடன் வாழ்ந்தவா் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளாா்.
முதல்வா் ‘எக்ஸ்’ தளத்தில் சனிக்கிழமை வெளியிட்ட பதிவு: தலைசிறந்த காந்தியவாதியும், விடுதலை பெற்ற இந்தியாவில் சென்னை மாகாணத்தின் முதல் முதல்வருமான ஓமந்தூராா் பிறந்தநாள் இன்று (பிப்.1). ஆலய பிரவேசச் சட்டம், ஆதி திராவிடா் நலனுக்கெனத் தனித் துறை, ஜமீன்தாா் ஒழிப்புச் சட்டம், இனாம் ஒழிப்புச் சட்டம், தேவதாசி முறை ஒழிப்புச் சட்டம், இந்து சமய அறநிலையச் சட்டம் எனக் குறுகிய காலத்தில் அவா் படைத்த சாதனைகள் ஏராளம்.
பொதுவாழ்வில் நோ்மை, உழவா்கள் மீது பெரும் அக்கறை என வாழ்ந்த அவருக்கு என் புகழஞ்சலிகள் என்று முதல்வா் தெரிவித்துள்ளாா்.