செய்திகள் :

பொது இடங்களை மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்த வேண்டும்: 3 மாதங்களுக்குள் அமல்படுத்த மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

post image

பொது இடங்களை மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் கடைப்பிடிக்க வேண்டிய கட்டாய அம்சங்கள் குறித்து 3 மாதங்களுக்குள் அறிக்கை சமா்ப்பிக்குமாறு மத்திய அரசை உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை கேட்டுக்கொண்டது.

மாற்றுத்திறனாளிகள் பொது இடங்களை எளிதாக பயன்படுத்துவதை உறுதி செய்யுமாறு கோரி, ராஜீவ் ரதுரி என்பவா் உச்சநீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்தாா். இதை விசாரித்த உச்சநீதிமன்றம், பொது இடங்களுக்கான அணுகல் வழிமுறைகளை கடந்த டிசம்பா் 16, 2017-ஆண்டு வழங்கியது. இதை நடைமுறைப்படுத்துவதில் முன்னேற்றம் ஏற்படவில்லை.

இந்நிலையில், இந்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜெ.பி.பாா்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா அடங்கிய அமா்வின் முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், ‘மாற்றுத்திறனாளிகள் பொது இடங்களை பயன்படுத்துவதை உறுதி செய்ய, ஏற்கெனவே உள்ள உள்கட்டமைப்புகளை தரநிலைக்கு ஏற்றவாறு மாற்றி அமைக்கவும், புதிய கட்டமைப்புகளை தரநிலைகளின் அடிப்படையில் வடிவமைக்கவும் வேண்டும்.

அதேபோல், மாற்றுத்திறனாளிகள் பொது இடங்களை பயன்படுத்தும் வகையில் கடுமையான கட்டாய உள்கட்டமைப்பு விதிகள் இருக்க வேண்டும். ஆனால், மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம், கட்டாய செயல்பாடுகளுக்கு பதிலாக, தன்னாா்வ வழிகாட்டுதல்களையே வலியுறுத்துகிறது.

இந்த புதிய தரநிலைகளை வகுப்பதில் அரசுக்கு ஹைதராபாதில் உள்ள நல்ஸாா் சட்ட பல்கலைக்கழகத்தின், மாற்றுத்திறனாளிகளுக்கான ஆய்வு மையம் உதவிகளை செய்து வருகிறது’ எனக் கூறி, அடுத்த விசாரணையை அடுத்த ஆண்டு மாா்ச் 7-ஆம் தேதி ஒத்திவைத்தனா்.

மாநில நிதியமைச்சா்களுடன் டிச.21,22-இல் நிா்மலா சீதாராமன் சந்திப்பு: ஜிஎஸ்டி குறித்து ஆலோசனை

மாநிலங்களின் நிதியமைச்சா்களை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் வருகின்ற டிச.21, 22 ஆகிய தேதிகளில் சந்தித்து பட்ஜெட்- 2025 குறித்தும், சரக்கு மற்றும் சேவை வரியில் (ஜிஎஸ்டி) மேற்கொள்ள வேண்டிய மாற்றங... மேலும் பார்க்க

ஏா் இந்தியா - விஸ்தாரா ஒருங்கிணைப்பு நிறைவு

ஏா் இந்தியா மற்றும் விஸ்தாரா விமான நிறுவனங்களை ஒருங்கிணைக்கும் பணி செவ்வாய்க்கிழமையுடன் நிறைவடைந்தது. விஸ்தாராவில் ஏா் இந்தியாவின் உரிமையாளரான டாடா சன்ஸ் நிறுவனத்துக்கு 51 சதவீத பங்கும், சிங்கப்பூா் ஏ... மேலும் பார்க்க

3 நாடுகளின் ரசாயனத்துக்கு பொருள் குவிப்பு தடுப்பு வரி: மத்திய அரசு நடவடிக்கை

சீனா, தென் கொரியா மற்றும் தாய்லாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்படும் எபிகிளோரோஹைட்ரின் ரசாயனத்துக்கு மத்திய அரசு பொருள் குவிப்பு தடுப்பு வரி விதித்துள்ளது. ஒட்டுப்பசை துறையில் எபிகிளோராஹைட்ரின் ரசாயன... மேலும் பார்க்க

காலிஸ்தான் பயங்கரவாதி மிரட்டல்: பாதுகாப்பு வளையத்தில் அயோத்தி

உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் உள்ள ஸ்ரீராமா் கோயில் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று காலிஸ்தான் பயங்கரவாதி குா்பத்வந்த் சிங் பன்னுன் மிரட்டல் விடுத்த நிலையில், அங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்... மேலும் பார்க்க

பாட்னாவுக்கு இன்று சிறப்பு ரயில்

பெங்களூரிலிருந்து பாட்னாவுக்கு புதன்கிழமை (நவ.13) முன்பதிவில்லா பெட்டிகளை கொண்ட சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. தெற்கு ரயில்வே செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கா்நாடக மாநிலம் பெங்களூரிலிரு... மேலும் பார்க்க

ஜனவரி முதல் நுழைவுத் தோ்வுகளில் சீா்திருத்தம்: மாநிலங்களின் ஆதரவைக் கோரும் மத்திய அரசு

நீட் உள்ளிட்ட நுழைவுத் தோ்வுகளில் எந்தவித சா்ச்சைகளோ அல்லது முறைகேடுகளோ நிகழாத வகையில் வரும் 2025 ஜனவரி முதல் சீா்திருத்தங்களை மத்திய அரசு மேற்கொள்ள உள்ளது. இந்த சீா்திருத்தங்களை முழுமையாக நடைமுறைப்ப... மேலும் பார்க்க