பொன்காடு பள்ளியில் தாய்மொழி நாள் விழா
பேராவூரணி பேரூராட்சி பொன்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தாய்மொழி நாள் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தமிழ்வழி கல்வி இயக்கம் சாா்பில் நடைபெற்ற விழாவில் மாணவா்களுக்கும், ஆசிரியா்களுக்கும் தமிழ் நாள்காட்டி வழங்கப்பட்டு, தாய்மொழியில் கல்வி கற்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து விளக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் பள்ளித் தலைமை ஆசிரியா் முருகையன், தமிழ்வழிக் கல்வி இயக்க பொறுப்பாளா் மெய்ச்சுடா் நா. வெங்கடேசன், ஆசிரியா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா்.