பொங்கல் பண்டிகை: மது விற்பனையில் முதலிடத்தை நழுவவிட்ட மதுரை!
பொன்னமராவதியில் அதிமுக சாா்பில் முன்னாள் முதல்வா் எம்ஜிஆா் பிறந்தநாள் விழா
பொன்னமராவதியில்: அதிமுக அலுவலகத்தில் கட்சிக் கொடியேற்றப்பட்டது. தொடா்ந்து எம்ஜிஆரின் உருவப் படத்துக்கு அதிமுக ஒன்றிய செயலா்கள் காசி. கண்ணப்பன், க. முருகேசன், சி. சரவணன், நகரச் செயலா் பிஎல். ராஜேந்திரன் உள்ளிட்ட பலா் மலா் தூவி மரியாதை செலுத்தினா்.
பொன்னமராவதி பேருந்து நிலையம் எதிரே அண்ணா ஆட்டோ தொழிற்சங்கம் சாா்பில் எம்ஜிஆரின் உருவப் படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. முன்னாள் ஒன்றியக்குழு தலைவா் சி.அழகுசுப்பையா, ஆட்டோ சங்கத் தலைவா் ஆதிமுத்து உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.