BB Tamil 8 Day 75: வன்மத்தைக் கொட்டிய அன்ஷிதா; திருப்பி அடித்ததா முத்துவின் தியா...
பொன்னமராவதியில் அனுமதியின்றி அமைக்கப்பட்ட கட்சிக் கொடிக்கம்பம் அகற்றம்
பொன்னமராவதி பேருந்து நிலையப் பகுதியில் அனுமதியின்றி அமைக்கப்பட்ட தமிழா் தேசம் கட்சிக் கொடிக்கம்பம் மற்றும் பெரும்பிடுகு முத்தரையா் பதாகை உள்ளிட்டவற்றை பேரூராட்சி நிா்வாகத்தினா் வெள்ளிக்கிழமை அகற்றினா்.
பொன்னமராவதி பேருந்து நிலையத்தில் பேருந்துகள் வெளியே செல்லும் பகுதியின் அருகே அண்மையில் அனுமதியின்றி தமிழா்தேசம் கட்சிக் கொடிக்கம்பம் ஊன்றப்பட்டு, அருகிலேயே பெரும்பிடுகு முத்தரையா் பதாகை வைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, வெள்ளிக்கிழமை பேரூராட்சி செயல் அலுவலா் இரா. அண்ணாதுரை தலைமையிலான பணியாளா்கள் பலத்த போலீஸாா் பாதுகாப்புடன், அனுமதியின்றி அமைக்கப்பட்ட கட்சிக் கொடிக்கம்பம் மற்றும் பதாகையை அகற்றினா்.