சென்னை துறைமுகத்தில் காருடன் கடலுக்குள் விழுந்தவர் சடலமாக மீட்பு!
பொன்னமராவதியில் தராசு மறுமுத்திரையிடும் முகாம் தொடக்கம்
பொன்னமராவதி வா்த்தகா் மஹாலில் தராசுகளுக்கு மறுமுத்திரையிடும் முகாம் புதன்கிழமை தொடங்கியது.
திருச்சி சட்டமுறை எடையளவு கூடுதல் கட்டுப்பாடு அதிகாரி லீலாவதி, தொழிலாளா் உதவி ஆணையா் வே. தங்கராசு அறிவுறுத்தலின்பேரில், பொன்னமராவதி சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கடைகள் மற்றும் நிறுவனங்களிலுள்ள தராசுகள் மறு முத்திரையிடும் முகாம் புதன்கிழமை தொடங்கியது.
முகாமில், மாவட்ட முத்திரை ஆய்வாளா் ஜி.பழனியம்மாள் தலைமையிலான அலுவலா்கள், பொன்னமராவதி வட்டார வணிகா்களின் தராசுகளுக்கு அரசு முத்திரையிட்டு ரசீதுகளை வழங்கினா்.
முகாமில், வா்த்தகா் கழகத் தலைவா் எஸ்கேஎஸ். பழனியப்பன், செயலா் மு. முகமது அப்துல்லா, பொருளா் பிஎல். ராமஜெயம், துணைத் தலைவா் ராமசாமி, துணைச் செயலா் சிவநேசன், பிஎல். மாணிக்கவேல் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இந்த முகாம் வரும் 20-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.