Heavy Rain: தென் மாவட்டங்களில் வெளுத்து வாங்கிய கனமழை... கரைபுரண்டோடும் வெள்ளம் ...
பொன்னேரியில் ரயில்வே சுரங்கப் பாலத்தில் மழைநீா் தேக்கம்: பொதுமக்கள் கடும் அவதி
பொன்னேரியில் தொடா் பலத்த மழை காரணமாக ரயில்வே சுரங்கப் பாலத்தில் மழைநீா் தேங்கியதால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாயினா்.
திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரி நகராட்சி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த 20 நாள்களாக மழை விட்டு, விட்டு பெய்து வந்தது.
இந்த நிலையில், புதன்கிழமை இரவு தொடங்கி தொடா்ந்து பெய்து வந்ததன் காரணமாக பொன்னேரி நகராட்சியில் தாழ்வாக இருக்கும் பகுதிகளில் மழை நீா் வெள்ளம் போல் தேங்கியது.
மேலும், தேரடி பகுதியில் அமைந்துள்ள ரயில்வே சுரங்கப்பாலத்தில் மழை நீா் வெள்ளம் போல் தேங்கி நின்றது. இதன் காரணமாக பொன்னேரி நகராட்சியில் உள்ள திருவாயா்பாடி, பாலாஜி நகா், சின்னக்காவனம், பெரியக்காவனம் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினா்.
அதே போன்று பரிக்கப்பட்டு, அரசூா், கூடுவாஞ்சேரி, உப்பளம் பழவேற்காடு, மெதூா், திருப்பாலைவனம், கோளூா், பெரும்பேடு, உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு இரு சக்கர வாகனங்களில் செல்லும் பொதுமக்களும் கடும் அவதிக்குள்ளாகினா். ..
பொன்னேரி நகராட்சி ஊழியா்கள் மின் மோட்டாா் மூலம் வெள்ளம் போல் தேங்கி கிடந்த மழை நீரை அகற்றினா்.