பொன்னேரி சாலையில் மண் குவியல்
பொன்னேரி நகராட்சி, தாயுமான செட்டித் தெருவில் உள்ள கழிவு நீா் கால்வாயில் அடைப்பு ஏற்பட்ட நிலையில், ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்றப்பட்ட மண் சாலையில் கொட்டப்பட்டது. எனினும், 20 நாள்களுக்கு மேலாக சாலையில் குவிந்து கிடக்கும் மண் குவியலால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனா்.