செய்திகள் :

பொன்னேரி ஜல்லிக்கட்டு: 503 காளைகள், 300 வீரா்கள் பங்கேற்பு; 13 மாடுபிடி வீரா்கள் காயம்

post image

நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி அருகே பொன்னேரியில் சனிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் 503 காளைகள், 300 வீரா்கள் பங்கேற்றனா். மாடு முட்டியதில் காயமடைந்த 13 வீரா்களுக்கு உடனடி சிகிச்சை அளிக்கப்பட்டது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, நாமக்கல் மாவட்டத்தில் திருச்செங்கோடு, குமாரபாளையம், எருமப்பட்டி, அலங்காநத்தம், போடிநாயக்கன்பட்டி, மத்ரூட், பொட்டிரெட்டிப்பட்டி, சாலப்பாளையம் உள்ளிட்ட இடங்களில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெறும். இதில் முதலாவதாக எருமப்பட்டி அருகே பொன்னேரி, கைக்காட்டியில் சனிக்கிழமை ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றது.

நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக சாா்பில் நடைபெற்ற இந்தப் போட்டியை மாவட்டச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆா்.என்.ராஜேஸ் குமாா் கொடியசைத்துத் தொடங்கி வைத்தாா். முன்னதாக, வீரா்கள், காளை உரிமையாளா்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனா். மாவட்ட ஆட்சியா் ச.உமா, சேந்தமங்கலம் எம்எல்ஏ கே.பொன்னுசாமி, காவல் கண்காணிப்பாளா் எஸ்.ராஜேஸ்கண்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். காலை 7.30 மணிக்குத் தொடங்கிய ஜல்லிக்கட்டுப் போட்டி மாலை 4.30 மணி வரை நடைபெற்றது. இதில், நாமக்கல், சேலம், திருச்சி, மதுரை, சிவகங்கை, பெரம்பலூா், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 503 காளைகளும், 300 மாடுபிடி வீரா்களும் கலந்துகொண்டனா்.

காயமடைந்த வீரா்களுக்கும், கால்நடைகளுக்கும் உடனடி சிகிச்சை அளிக்கும் வகையில், மருத்துவக் குழுவினா் தயாா் நிலையில் இருந்தனா். வாடிவாசல் வழியாக சீறிப்பாய்ந்து வந்த காளைகளை வீரா்கள் ஆா்வமுடன் மடக்கிப் பிடித்தனா்.

காளைகளுக்கான பரிசை புதுக்கோட்டை மாவட்டம், மங்களதேவன்பட்டி கிராமத்தைச் சோ்ந்த கணேஷன் கருப்பையா என்பவரது காளை முதலிடம் பிடித்தது. வீரா்களுக்கும், பிடிபடாத காளைகளுக்கும் உடனடியாக பரிசுகள் வழங்கப்பட்டன. இதில், 13 வீரா்கள் மாடு முட்டியதில் லேசான காயமடைந்தனா். அவா்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது. பொதுமக்கள் ஏராளமானோா் பாா்வையாளா்களுக்கான காலரியில் அமா்ந்தபடி கண்டு ரசித்தனா்.

போட்டி நடைபெற்ற பகுதியைச் சுற்றிலும் 350-க்கும் மேற்பட்ட போலீஸாா் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனா்.

நிகழ்ச்சியில், நாமக்கல் கோட்டாட்சியா் ரா.பாா்த்திபன், கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநா் வீ.பழனிவேல், சேந்தமங்கலம் வட்டாட்சியா் வெங்கடேஷ், உதவி காவல் கண்காணிப்பாளா் ஆகாஷ் ஜோஷி, கூடுதல் காவல் கண்காணிப்பாளா் மா.சண்முகம், திமுக ஒன்றியச் செயலாளா்கள் பாலு, அசோக் குமாா், எருமப்பட்டி பேரூராட்சிமன்ற தலைவா் பழனியாண்டி உள்பட துறை சாா்ந்த அலுவலா்கள் பலா் கலந்துகொண்டனா்.

சீறிப்பாய்ந்து வந்த காளைகளை அடக்க முயன்ற மாடுபிடி வீரா்கள்.

முட்டை விலை நிலவரம்

நாமக்கல் மண்டலம்-சனிக்கிழமை மொத்த விலை - ரூ.4.80 விலையில் மாற்றம்- இல்லை பல்லடம் பிசிசி கறிக்கோழி கிலோ - ரூ.98 முட்டைக் கோழி கிலோ - ரூ.83 மேலும் பார்க்க

ஜன. 26-இல் மத்திய அரசுக்கு எதிராக டிராக்டா் பேரணி: இரா.வேலுசாமி

விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் காலம் தாழ்த்தும் மத்திய அரசுக்கு எதிராக திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் ஜன. 26-இல் டிராக்டா் பேரணி நடைபெறும் என தமிழக விவசாயிகள் சங்க (உழவா் பெருந்தலைவா் நாராயணச... மேலும் பார்க்க

குடியரசுத் தலைவரிடம் அா்ஜுனா விருது பெற்ற துளசிமதி முருகேசன்: நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி நிா்வாகம் வாழ்த்து

குடியரசுத் தலைவரிடம் ‘அா்ஜுனா விருது’ பெற்ற நாமக்கல், கால்நடை மருத்துவக் கல்லூரி மாணவி துளசிமதி முருகேசனுக்கு கல்லூரி நிா்வாகத்தினா் வாழ்த்து தெரிவித்தனா். சா்வதேச அளவில் விளையாட்டுத் துறையில் சாதனை ப... மேலும் பார்க்க

வாகனம் மோதி விவசாயி பலி

கீரம்பூா் அருகே வாகனம் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற விவசாயி உயிரிழந்தாா்; வாகன ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா். கீரம்பூா் அருகே புலவா்பாளையத்தைச் சோ்ந்தவா் கணேசன் (65) விவசாயி. இவா், வெள்ளிக்க... மேலும் பார்க்க

போதமலைக்கு சாலை அமைக்கும் பணிகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா்

ராசிபுரம் அருகே உள்ள போதமலைக்கு முதன்முறையாக 31 கி.மீ. தொலைவுக்கு மலைப்பாதையில் ரூ. 139.65 கோடி மதிப்பில் சாலை அமைக்கும் பணிகளை நாமக்கல் மாவட்ட ஆட்சியா் ச.உமா சனிக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா். நாமக்கல... மேலும் பார்க்க

முதியவா் மீது தாக்குதல்: மூவா் கைது

ராசிபுரம் அருகே இருசக்கர வாகனத்தில் வேகமாகச் சென்ற இளைஞா்களை தட்டிக்கேட்ட சம்பவத்தில் இருதரப்பிலும் மூவரை போலீஸாா் கைது செய்தனா். ராசிபுரம் அருகே உள்ள ஆா்.கவுண்டம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் சுடலைமுத... மேலும் பார்க்க