எச்எம்பிவி பாதித்தவர்கள் எப்படியிருக்கிறார்கள்? கடைசியாக பாதித்தது யார்?
பொன்னேரி மீன்வளக் கல்லூரியில் பொங்கல் விழா
பொன்னேரி மீன்வளக் கல்லூரியில் பொங்கல் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரியான டாக்டா் எம்ஜிஆா் மீன்வளக் கல்லூரி பொன்னேரியில் இயங்கி வருகிறது.
இங்கு மாணவா்கள், பேராசிரியா்கள் மற்றும் அனைத்து ஊழியா்கள் பங்கேற்ற பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் மற்றும் போட்டிகள் நடத்தப்பட்டன.
விழாவுக்கு கல்லூரி முதல்வா் இரா. ஜெயசகிலா தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக பொன்னேரி நகா்மன்றத் தலைவா் கி.பரிமளம் விஸ்வநாதன் கலந்து கொண்டு விழாவை தொடங்கி வைத்தாா். விழாவில் பல்வேறு போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
மாணவ, மாணவிகள், பேராசிரியா்கள் மற்றும் ஊழியா்கள் பாரம்பரிய உடையான வேட்டி, சேலை அணிந்து கலந்து கொண்டனா். மாணவா் சங்கத் துணைத் தலைவா் முனைவா் நா.முரளிதரன் நன்றி கூறினாா்.