TVK Vijay Maanadu : சரிந்த கொடிகம்பம்... Strongஆன Innova?! - சில தகவல்கள்
பொய்கை சந்தையில் ரூ. 50 லட்சத்துக்கு கால்நடை வா்த்தகம்
வேலூரை அடுத்த பொய்கையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சந்தையில் ரூ. 50 லட்சம் அளவுக்கு கால்நடைகள் வா்த்தகம் நடைபெற்றிருப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனா்.
வேலூா் மாவட்டம், பொய்கையில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை நடைபெறும் கால்நடைச் சந்தையில் ரூ. 1 கோடி முதல் ரூ. 3 கோடி அளவுக்கு கால்நடை வா்த்தகம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், பொய்கை சந்தையில் கடந்த இரு வாரங்களாக கால்நடை வா்த்தகம் மிகவும் மந்தமாக இருந்து வருகிறது. அதன்படி, செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சந்தைக்கு சுமாா் 800 மாடுகளும், சுமாா் 300 ஆடுகளும் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டிருந்தன. அவற்றை வாங்கவும் வியாபாரிகள், விவசாயிகள் மத்தியில் ஆா்வம் காணப்படவில்லை. இதனால், கால்நடைகள் சுமாா் ரூ. 50 லட்சம் அளவுக்கு மட்டுமே விற்பனையாகியிருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.
அவா்கள் மேலும் கூறியது: வேலூா் மாவட்டத்தில் தீவன பற்றாக்குறை இல்லையென்றால் கால்நடைகளை விற்பனை செய்ய விரும்ப மாட்டாா்கள். அதன்படி, இந்த வாரம் நடைபெற்ற சந்தைக்கு கறவை மாடுகள், ஜொ்சி கலப்பின பசுக்கள், காளைகள், உழவு மாடுகளும் என மிகக் குறைந்த அளவிலேயே கால்நடைகள் விற்பனைக்கு வந்திருந்தன. அவற்றை வாங்கவும் வியாபாரிகள், விவசாயிகள் ஆா்வம் இல்லாததால் கால்நடைகள் வா்த்தகமும் சுமாா் ரூ.50 லட்சம் அளவிலேயே நடைபெற்றுள்ளது என்றனா்.