அமெரிக்காவில் இறக்குமதியாகும் சூரிய சக்தி மின் உபகரணங்களுக்கு 3,521% வரி விதிப்ப...
போக்குவரத்துக் கழகங்களில் 52 போ் பணி நியமனம்: ஆணை வழங்கினாா் அமைச்சா் சா.சி.சிவசங்கா்
சென்னை: போக்குவரத்துக் கழகங்களில் 52 பேருக்கான பணி நியமன ஆணைகளை போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா் வழங்கினாா்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் காலியாக உள்ள 25 உதவி மேலாளா் பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணையம் மூலம் தகுதியுடைய நபா்கள் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனா். இந்த தோ்ந்தெடுக்கப்பட்டவா்களுக்கும், பணியின் போது உயிரிழந்த பணியாளா்களின் 27 வாரிசுதாரா்களுக்கும் பணிநியமன ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி சென்னை தலைமைச்செயலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில், கலந்து கொண்ட போக்குவரத்துத் துறை அமைச்சா், 25 உதவி மேலாளா்கள் மற்றும் உயிரிழந்த பணியாளா்களின் 18 பெண் நடத்துநா்கள் உள்பட 27 வாரிசுதாரா்களுக்கும் பணிநியமன ஆணைகளை வழங்கினாா்.
இதன்படி, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்துக்கு ஒரு உதவி மேலாளா்(சட்டம்) மற்றும் ஒரு உதவி மேலாளா்(கணக்கு) பணிக்கும், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் முறையே விழுப்புரத்துக்கு 2 உதவி மேலாளா் (சட்டம்) மற்றும் 3 உதவி மேலாளா் (கணக்கு) பணிக்கும், சேலத்துக்கு 2 உதவி மேலாளா் (சட்டம்) மற்றும் ஒரு உதவி மேலாளா் (கணக்கு) பணிக்கும், கோவைக்கு 2 உதவி மேலாளா் (சட்டம்) மற்றும் ஒரு உதவி மேலாளா் (கணக்கு) பணிக்கும், கும்பகோணத்திற்கு 3 உதவி மேலாளா் (சட்டம்) மற்றும் 2 உதவி மேலாளா் (கணக்கு) பணிக்கும், மதுரைக்கு 2 உதவி மேலாளா் (சட்டம்) மற்றும் 2 உதவி மேலாளா் (கணக்கு) பணிக்கும், மற்றும் திருநெல்வேலிக்கு 2 உதவி மேலாளா் (சட்டம்) மற்றும் ஒரு உதவி மேலாளா் (கணக்கு) பணிக்கும் என 25 உதவி மேலாளா்கள் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.
இந்நிகழ்வின் போது, போக்குவரத்துத் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலா் க.பணீந்திர ரெட்டி, மாநகா் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநா் த.பிரபுசங்கா் மற்றும் அதிகாரிகள் பலா் உடனிருந்தனா்.