செய்திகள் :

போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை: அரசாணை வெளியிட்டது தமிழக அரசு!

post image

பொங்கல் திருநாளை முன்னிட்டு ஒரு லட்சத்து எட்டாயிரத்து நூற்றைந்து போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு 2024 ஆம் ஆண்டுக்கான சாதனை ஊக்கத்தொகை வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி 200 நாள்கள் மற்றும் அதற்கு மேல் பணிபுரிந்த ஊழியர்களுக்கு ரூ.625 ஊக்கத் தொகையாக வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், பொங்கல் திருநாளை முன்னிட்டு ஒரு இலட்சத்து எட்டாயிரத்து நூற்றைந்து போக்குவரத்துக் கழகப் ஊழியர்களுக்கு ரூ. 6 கோடியே 41 லட்சத்து 18 ஆயிரம் சாதனை ஊக்கத்தொகை வழங்கப்படும்.

தமிழ்நாட்டில் சிறப்பான மற்றும் திறமையான போக்குவரத்து சேவையை பொதுமக்களுக்கு அளிப்பதில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் முக்கிய

பங்காற்றுகின்றன. இந்தியாவிலேயே தமிழகத்தில் இயங்கும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தான் பயணிகள் அடர்வு, பேருந்து பயன்பாடு, எரிபொருள் செயல்திறன் ஆகியவற்றில் உயர்ந்து விளங்குகின்றன.

குக்கிராமம் முதல் மாநகரங்கள் உட்பட மக்கள் குடியிருக்கும் அனைத்துப் பகுதிகளுக்கும் தங்குதடையின்றி, போக்குவரத்து சேவை அளிக்கப்பட்டு வருகின்றது.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்கள், தமிழ்நாடு போக்குவரத்து வளர்ச்சி நிதி நிறுவனம், பல்லவன் போக்குவரத்து அறிவுரைப் பணிக்குழு ஆகிய அனைத்து நிறுவனங்களிலும் தற்போது சுமார் ஒரு லட்சம் ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றார்கள்.

இதையும் படிக்க | பட்டினிச் சாவு இல்லாத மாநிலம் தமிழ்நாடு: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்கள், தமிழ்நாடு போக்குவரத்து வளர்ச்சி நிதி நிறுவனம், பல்லவன் போக்குவரத்து அறிவுரைப் பணிக்குழு ஆகியவற்றில் பணிபுரியும், போக்குவரத்து கழகங்களின் ஊழியர்களில், 2024-ஆம் ஆண்டில் 91 நாட்கள் மற்றும் அதற்கு மேலும், ஆனால் 151 நாட்களுக்கும் குறைவாக பணிபுரிந்த ஊழியர்களுக்கு ரூ. 85 வீதமும்; 151 நாட்கள் மற்றும் அதற்கு மேலும் ஆனால் 200 நாட்களுக்கும் குறைவாக பணிபுரிந்த ஊழியர்களுக்கு ரூ. 195 வீதமும், 200 நாட்கள் மற்றும் அதற்கு மேலும் பணிபுரிந்த ஊழியர்களுக்கு ரூ.625 வீதமும் பொங்கல் “சாதனை ஊக்கத் தொகை” வழங்கப்படும்.

இந்த உத்தரவின்படி, அனைத்து அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் ஒரு இலட்சத்து எட்டாயிரத்து நூற்றைந்து போக்குவரத்துக் கழகப் பணியாளர்களுக்கு ரூ.6 கோடியே 41 லட்சத்து 18 ஆயிரம் சாதனை ஊக்கத்தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கத்தார் கவிஞர் முகம்மது அல் அஜாமி! கவிதைதான் குற்றம் - 11

நாடு: கத்தார்! உலகின் தனிநபர் பணக்கார நாடுகளில் ஒன்று. மக்கள் தொகை 2.2 மில்லியன்; ஆனால் குடிமக்கள் (citizens) 250,000 பேர் மட்டுமே! தோராயமாக 8 க்கு ஒருவர் மட்டுமே குடிமகன்/ குடிமகள்! இவர்களில் பாதிப் ... மேலும் பார்க்க

ரூ.3 கோடி மதிப்பிலான காண்டாமிருகக் கொம்புகள் பறிமுதல்! 4 பேர் கைது!

புது தில்லியில் காண்டாமிருகத்தின் கொம்புகளை பதுக்கிய 4 பேர் அம்மாநில காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர்.அம்மாநிலக் காவல் துறையினருக்கு கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் கடந்த ஜன.9 அன்று லாக்பட் ... மேலும் பார்க்க

முதல்முறையாக சிங்கப்பூர் அதிபர் இந்தியா வருகை!

கடந்த 10 ஆண்டுகளில் சிங்கப்பூர் நாட்டு அதிபர் முதல்முறையாக அரசுப்பயணமாக இந்தியா வருகிறார்.தென்கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூரின் அதிபர் தர்மன் சண்முகரத்தினம் வருகின்ற ஜன.14 அன்று அரசு முறைப்பயணமாக இந்தி... மேலும் பார்க்க

துப்பாக்கியால் சுட்ட மர்ம நபர்! படுகாயமடைந்த சிறுவன்!

புது தில்லியில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில் 15 வயது சிறுவன் படுகாயம் அடைந்துள்ளார்.வடகிழக்கு தில்லியின் வெல்கம் பகுதியின் பி-ப்ளாக்கில் உள்ள தனது வீட்டின் வாசலில் நேற்று (ஜன.... மேலும் பார்க்க

கிராமவாசிகள் நோய்வாய்ப்பட தடை! எங்கு?

இத்தாலி நாட்டின் தெற்கு பகுதியிலுள்ள பெல்காஸ்ட்ரோ எனும் கிராமத்தில் உள்ளூர் மக்கள் நோய்வாய்ப்பட தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டின் கட்டன்சாரோ மாகாணத்திலுள்ள பெல்காஸ்ட்ரோ எனும் கிராமத்தின் மேயர் அண்ட... மேலும் பார்க்க

தமிழக பாஜகவுக்கு புதிய தலைவரா?

தமிழக பாஜகவில் அடுத்த தலைவரை தேர்வு செய்வதற்காக வரும் 17 ஆம் தேதி மேலிடப் பொறுப்பாளர் கிஷன் ரெட்டி சென்னை வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.பாஜக தேசிய தலைமை மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை உள்கட்சி தேர்தலை... மேலும் பார்க்க