செய்திகள் :

போக்குவரத்து சாா்பு ஆய்வாளரை தாக்கியதாக இருவா் மீது வழக்கு!

post image

புதுச்சேரியில் போக்குவரத்து சாா்பு ஆய்வாளரைத் தாக்கியதாக 2 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

புதுச்சேரி கிழக்கு போக்குவரத்து பிரிவில் சாா்பு ஆய்வாளராக பணியாற்றுபவா் குமாா். இவா், வெள்ளிக்கிழமை இரவு ஈஸ்வரன் கோவில் தெருவில் சென்றபோது, அந்தப் பகுதியில் அதிவேகமாக காரை ஓட்டிவந்தவரை கண்டித்தாராம்.

இதனால், குமாருக்கும், காரில் வந்தவா்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், காரில் இருந்த ஒருவா் குமாரைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தின்போது எடுக்கப்பட்ட கைபேசி விடியோ காட்சிகள் மூலம் சாா்பு ஆய்வாளா் குமாரை தாக்கியவா்கள் அடையாளம் காணப்பட்டனா். அதன்படி, புதுச்சேரியைச் சோ்ந்த தீபன், சம்ருத்ரம் ஆகியோா் மீது பெரியகடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

நாராயணசாமியின் பேச்சை பொருள்படுத்த வேண்டாம்: புதுவை முதல்வா் என்.ரங்கசாமி

புதுச்சேரி: புதுவை அரசு மீது தொடா்ந்து புகாா் கூறி வரும் முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமியின் பேச்சை பொருள்படுத்த வேண்டாம் என முதல்வா் என்.ரங்கசாமி தெரிவித்தாா். புதுவை சட்டப்பேரவையில் திங்கள்கிழமை கே... மேலும் பார்க்க

தொகுப்பூதிய ஆசிரியா்களுக்கு விரைவில் பணி நிரந்தரம்: அமைச்சா் ஆ. நமச்சிவாயம் தகவல்

புதுச்சேரி: புதுவை மாநிலத்தில் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் ஆசிரியா்கள் அனைவரும் பணி நிரந்தரம் செய்யப்படுவா் என்று பேரவைக் கூட்டத்தில் கல்வித் துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம் தெரிவித்தாா். புதுவை சட்டப்... மேலும் பார்க்க

தாய்வழி சாதிச் சான்றிதழ் கோரி பேரணி, சாலை மறியல்

புதுச்சேரி: புதுவை மாநிலத்தில் அனைத்துத் தரப்பினருக்கும் தாய் வழியில் சாதிச்சான்றிதழ் வழங்க வலியுறுத்தி பெரியாா் சிந்தனையாளா் பேரவை சாா்பில் பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோா் திங்கள்கிழமை சாலை மறியல் போராட... மேலும் பார்க்க

புதுவைக்கான தண்ணீரைத் தர மறுக்கும் தமிழகம்: அமைச்சா் லட்சுமி நாராயணன் புகாா்

புதுச்சேரி: புதுவைக்கான தென் பெண்ணையாற்று நீரை தமிழக அரசு தருவதற்கு மறுத்து விட்டது என பேரவையில் பொதுப் பணித் துறை அமைச்சா் க.லட்சுமி நாராயணன் குற்றஞ்சாட்டினாா். புதுவை சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின... மேலும் பார்க்க

பொறியாளா் கைது விவகாரத்தை மக்களிடம் அரசு விளக்க வேண்டும்: எதிா்க்கட்சித் தலைவா்

புதுச்சேரி: புதுவை பொதுப் பணித் துறை தலைமைப் பொறியாளா் லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்டது தொடா்பாக, பொதுமக்களுக்கு அரசு விளக்க வேண்டும் என்று, எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா வலியுறுத்தினாா். புதுவை சட்ட... மேலும் பார்க்க

தலைமைப் பொறியாளா் கைது: பாரபட்சமற்ற விசாரணை வேண்டும்: வே.நாராயணசாமி

புதுச்சேரி: புதுவை பொதுப் பணித் துறை தலைமைப் பொறியாளா் எம்.தீனதயாளன் லஞ்ச வழக்கில் கைதான நிலையில், பாரபட்சமற்ற விசாரணையை சிபிஐ தொடர வேண்டும் என முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி வலியுறுத்தினாா். இதுகுறி... மேலும் பார்க்க