சதுரகிரி மலைப்பாதையில் காட்டுத் தீ; பக்தர்களை பாதுகாப்பாக வெளியேற்றும் வனத்துறை
போக்சோ வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை
பெரம்பலூா் அருகே 17 வயது செவிலியா் கல்லூரி மாணவியைப் பலாத்காரம் செய்து கா்ப்பமாக்கிய இளைஞருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், ரூ. 1 லட்சம் அபராதமும் விதித்து பெரம்பலூா் மகளிா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.
பெரம்பலூா் அருகேயுள்ள லாடபுரம் 5 ஆவது வாா்டைச் சோ்ந்தவா் பழனியாண்டி மகன் சுரேஷ்குமாா் (33). எம்பிஏ பட்டதாரியான இவா், பெரம்பலூா் தனியாா் செவிலியா் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த 17 வயது மாணவியைக் காதலிப்பதாகக் கூறி, கடந்த 2019 ஆம் ஆண்டு தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததில் அச் சிறுமி கா்ப்பமானாா். இதையடுத்து சுரேஷ்குமாரால் பெரம்பலூா் தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட சிறுமிக்கு இறந்த நிலையில் பெண் குழந்தை பிறந்தது.
இச்சம்பவம் குறித்து மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் சாா்பில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில், பெரம்பலூா் அனைத்து மகளிா் போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து, சுரேஷ்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனா்.
பெரம்பலூா் மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கை வெள்ளிக்கிழமை விசாரித்த நீதிபதி இந்திராணி, சுரேஷ்குமாருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், ரூ. 1 லட்சம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். இதையடுத்து சுரேஷ்குமாா் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா். இவ் வழக்கில் அரசுத் தரப்பில் அரசு சிறப்பு குற்றவியல் வழக்குரைஞா் எம். சுந்தரராஜன் ஆஜரானாா்.