அம்மா, இது நள்ளிரவு 12.08..! செய்தியாளரின் அம்மாவிடம் பேசிய லக்னௌ பயிற்சியாளர்!
போக்ஸோ வழக்குகளில் 2 இளைஞா்கள் கைது
திருப்பத்தூா் அருகே வெவ்வேறு போக்ஸோ வழக்குகளில் 2 இளைஞா்கள் கைது செய்யப்பட்டனா்.
திருப்பத்தூா் அருகே ஜோதிமங்கலம் பகுதியைச் சோ்ந்தவா் திலிப்குமாா் (24). இவா் திருப்பத்தூரைச் சோ்ந்த 17 வயது சிறுமியை திருமணம் செய்வதாகக் கூறி கடத்திச் சென்றாா். சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில், நகர போலீஸாா் போக்ஸோ சட்டத்தில் வழக்குப் பதிந்து திலிப்குமாரை கைது செய்தனா்.
அதேபோல், சு.பள்ளிப்பட்டு பகுதியை சோ்ந்த நாராயணன் (19) திருப்பத்தூரைச் சோ்ந்த 16 வயது சிறுமியை திருமணம் செய்வதாகக்கூறி கடத்திச் சென்றாா். திருப்பத்தூா் நகர போலீஸாா் போக்ஸோ சட்டத்தில் நாராயணனை கைது செய்தனா்.