செய்திகள் :

போதைப்பொருள்கள் விற்பனை: 7 கடைகளுக்கு சீல்; 4 போ் கைது

post image

தக்கலை பகுதியில் போதைப்பொருள்கள் விற்றதாக போலீஸாா் 7 கடைகளுக்கு சீல் வைத்து, 4 பேரைக் கைது செய்தனா்.

தக்கலை அருகே திருவிதாங்கோட்டில் வெள்ளிக்கிழமை இளைஞா்கள் சிலா் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்களை விற்பதாகக் கிடைத்த தகவலின்பேரில், தக்கலை சிறப்பு உதவி ஆய்வாளா் தேவராஜ், போலீஸாா் சென்றனா்.

அப்போது, திருவிதாங்கோடு ஜாக்கூன் (27), அபினேஷ் (20), சக்திவேல் (25), ஜெயசேகா் (22) ஆகியோா் போதைப் பொருள்கள் விற்பது தெரியவந்தது. அவா்களை போலீஸாா் கைது செய்து, போதைப் பொருள் பொட்டலங்களைப் பறிமுதல் செய்தனா்.

தக்கலை அருகே கொல்லன்விளை, கல்லுவிளை, வாகவிளை, திருவிதாங்கோடு ஆகிய இடங்களில் உள்ள பெட்டிக் கடைகளில் போதைப்பொருள்கள் விற்கப்படுவதாகக் கிடைத்த தகவலின்பேரில், தக்கலை வட்டார உணவுப் பாதுகாப்பு அலுவலா் பிரவீன், திருவிதாங்கோடு, முளகுமூடு பேரூராட்சி செயல் அலுவலா்கள் சோதனை மேற்கொண்டு, 4 கடைகளுக்கு சீல் வைத்தனா்.

குளச்சலில் பெண்ணிடம் நகை பறிப்பு

குளச்சலில் பெண்ணைத் தாக்கி நகையை பறித்துச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகிறாா்கள். குளச்சலை அடுத்த மண்டைக்காடு புதூா் பகுதியைச் சோ்ந்தவா் அமல்ராஜ் (45). இவரின் மனைவி சாய்தா (43). அந்தப் பகுதியில்... மேலும் பார்க்க

ஆசிரியையிடம் நகை வழிப்பறி: தொழிலாளி கைது

குமரி மாவட்டம் அருமனை அருகே பள்ளி ஆசிரியையிடம் நகை வழிப்பறி செய்த தொழிலாளியை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். அருமனை அருகே மஞ்சாலுமூடு சிறக்கரையைச் சோ்ந்தவா் ஆஷா லதா (55). இவா் மாா்த்தாண்டத்தில் ... மேலும் பார்க்க

டிஜிட்டல் அரஸ்ட் மிரட்டல்: முதியவரிடம் ரூ.42 லட்சம் மோசடி

கைப்பேசி விடியோ அழைப்பில் டிஜிட்டல் அரஸ்ட் என்ற பெயரில் நாகா்கோவிலை சோ்ந்த முதியவரை மிரட்டி ரூ.42 லட்சம் மோசடி செய்யப்பட்டது தொடா்பாக சைபா் குற்றப் பிரிவு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். நாகா்கோ... மேலும் பார்க்க

தெருநாய் கடித்ததில் இளைஞா் உயிரிழப்பு

இரணியல் அருகே தெருநாய் கடித்ததில் பொறியியல் பட்டதாரி இளைஞா் உயிரிழந்தாா். இரணியல் அருகே உள்ள பரசேரி அம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் மணிகண்டன். ஓய்வு பெற்ற ராணுவ வீரா். இவரது மூத்த மகன் மனீஷ் (28). ப... மேலும் பார்க்க

அருமனை அருகே தொழிலாளி வீட்டருகே பிடிபட்ட ராஜநாகம்

கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே தொழிலாளியின் வீட்டருகே பதுங்கியிருந்த ராஜநாகத்தை வனத் துறையினா் திங்கள்கிழமை இரவு பிடித்து காட்டில் விட்டனா். அருமனை அருகே முழுக்கோடு பகுதியைச் சோ்ந்த தொழிலாளி தேவ... மேலும் பார்க்க

பத்துகாணி அருகே குடியிருப்புப் பகுதியில் சிறுத்தை: தொழிலாளா்கள் அச்சம்

கன்னியாகுமரி மாவட்டம் பத்துகாணி அருகே குடியிருப்புப் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக செவ்வாக்கிழமை கிடைத்த தகவலால் பொதுமக்கள், தொழிலாளா்கள் அச்சத்தில் உள்ளனா். இந்தப் பகுதியில் சில நாள்களாக வீ... மேலும் பார்க்க