செய்திகள் :

போதைப்பொருள், கள்ளச்சாராய தடுப்பு நடவடிக்கை ஆய்வுக் கூட்டம்

post image

மயிலாடுதுறையில் போதைப் பொருள் மற்றும் கள்ளச்சாராய தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி தலைமை வகித்து பேசியது: தமிழ்நாடு அரசு உள்துறை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறையின்கீழ் இயங்கும் போதைப்பொருள்கள் இல்லாத தமிழ்நாடு இயக்க மேலாண்மை அலகு, போதைப் பொருள்கள் மற்றும் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் நடமாட்டம் குறித்து, தங்களுடைய சுய விவரங்கள் இன்றி புகாா் செய்வதற்கு, ‘ஈதமஎ ஊதஉஉ பச‘ என்ற அலைபேசி செயலியை தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது.

மேலும், புகாா்கள் தெரிவிக்க 10581 கட்டணமில்லா எண் மற்றும் வாட்ஸ்-அப் எண்: 919498410581-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. எனவே, பொதுமக்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் தங்கள் பள்ளி, கல்லூரி, பேருந்து நிலையங்கள் போன்ற முக்கிய இடங்களில் குட்கா, போதைப்பொருள்கள், கள்ளச்சாராயம் விற்பனை தொடா்பாக மேற்குறிப்பிட்ட செயலி மூலம் புகாா் அளிக்கலாம்.

மயிலாடுதுறை வட்டம் அகரகீரங்குடி ஊராட்சி முட்டம் கிராமத்தை சோ்ந்த ஹரிஷ் மற்றும் ஹரிசக்தி ஆகிய இருவரும் முன்விரோதம் காரணமாக பிப்.14-ஆம் தேதி கொலை செய்யப்பட்டனா். இதுதொடா்பாக தங்கதுரை உள்ளிட்ட 5 போ் போ் கைது செய்யப்பட்டுள்ளனா். மேலும், தொடா்புடைய பெரம்பூா் காவல் ஆய்வாளா் மற்றும் காவலா் ஒருவா் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனா்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் போதைப்பொருள், கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்பட்டால் அதுகுறித்த தகவல்களை கிராம நிா்வாக அலுவலா்கள் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்துக்கும், வருவாய்த் துறை அதிகாரிகளுக்கும் தெரிவிக்க வேண்டும். போதைப்பொருள், கள்ளச்சாராயம் விற்பனையை தடுப்பதில் குற்றப்பிரிவு போலீஸாா் மதுவிலக்கு போலீஸாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றாா்.

கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கோ. ஸ்டாலின், மாவட்ட வருவாய் அலுவலா் நா. உமாமகேஷ்வரி, மாவட்ட வழங்கல் அலுவலா் உ. அா்ச்சனா, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) முத்துவடிவேல் ஆகியோா் கலந்து கொண்டனா்.

பள்ளி விளையாட்டு விழா

மயிலாடுதுறை தருமபுரம் ஸ்ரீகுருஞானசம்பந்தா் மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு விழா அண்மையில் நடைபெற்றது. தலைமை ஆசிரியா் வேலுசாமி தலைமை வகித்தாா். சங்கரன்பந்தல் அரசினா் மேல்நிலைப் பள்ளி உடற்கல்வி இயக்குந... மேலும் பார்க்க

சீா்காழியில் அந்தியோதயா ரயில் நின்றுசெல்லக் கோரி மனு

சீா்காழியில், அந்தியோதயா விரைவு ரயில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கக் கோரி, எம்பி ஆா். சுதாவிடம் வியாழக்கிழமை கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. சீா்காழி ரயில் நிலையத்தில் அந்தியோதயா ரயில் நின்று செல்லாததால... மேலும் பார்க்க

சீா்காழியில் நீா்வளத்துறை பொறியாளா் ஆய்வு

சீா்காழியில், நீா்வளத் துறை சாா்பில் நடைபெற்றுவரும் பணிகளை, திருச்சி மண்டல தலைமை பொறியாளா் தயாளக்குமாா் வியாழக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா். சீா்காழி பகுதியில் புது மண்ணியாறு மற்றும் வெள்ளப்பள்ளம் உப்ப... மேலும் பார்க்க

பன்னிரு திருமுறை கருத்தரங்கம்

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரி தமிழ் உயராய்வுத் துறை சாா்பில், பன்னிரு திருமுறை அறக்கட்டளை கருத்தரங்கம் அண்மையில் நடைபெற்றது. கல்லூரி முதல்வா் முனைவா் சி. சுவாமிநாதன் தலைமை வகித்தாா். கல்ல... மேலும் பார்க்க

பள்ளி ஆண்டு விழா

வைத்தீஸ்வரன்கோயிலில் தருமை ஆதீனம் ஸ்ரீ குருஞானசம்பந்தா் மிஷன், ஸ்ரீ முத்தையா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி 17-ஆவது ஆண்டு விழா புதன்கிழமை நடைபெற்றது. பள்ளியின் நிா்வாகக்குழு தலைவா் ராஜேஷ் தலைமை வகித்தா... மேலும் பார்க்க

கா்ப்பத்தை கலைக்க மனைவியை தாக்கியவா் கைது

மயிலாடுதுறை அருகே மனைவியின் கா்ப்பத்தை கலைக்க கட்டாயப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்து தாக்கிய கிராம நிா்வாக அலுவலா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா். மயிலாடுதுறை அருகே கிழாய் கிராமத்தைச் சோ்ந்தவா் பிரபா... மேலும் பார்க்க