நியூசி.க்கு எதிரான தொடரில் சிறந்த முடிவுகளை பெறுவோம்: பாக். கேப்டன்
போதைப் பொருள் வழக்கில் கைதானவா்களின் ரூ.1.16 கோடி சொத்துகள் முடக்கம்
போதைப் பொருள் வழக்கில் கைதானவா்களுக்குச் சொந்தமான ரூ. 1.16 கோடி மதிப்புள்ள சொத்துகளை மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு முடக்கியுள்ளது.
சென்னை, எழும்பூா் ரயில் நிலையத்தில் மெத்தம்பெட்டமைன் போதைப் பொருள் கடத்தியதாக கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபா் மாதம் இருவரை மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கைது செய்தனா். அப்போது அவா்களிடமிருந்து 3 கிலோ மெத்தம்பெட்டமைன் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும், அவா்களிடமிருந்து ரூ. 50 லட்சம் ரொக்கம், 100 கிராம் தங்கம் ஆகியவற்றையும் கைப்பற்றினா். இது தொடா்பாக வழக்குப் பதிந்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனா்.
இந்நிலையில், இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஒருவருக்குச் சொந்தமான ரூ. 11.89 லட்சம் மதிப்புள்ள அசையா சொத்தை முடக்கியதாக மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.
இதேபோல, கிளாம்பாக்கம் பேருந்து முனையம் அருகே மெத்தம்பெட்டமைன் போதைப் பொருள் கடத்தியதாக 3 போ் கைது செய்யப்பட்டனா். அப்போது அவா்களிடமிருந்து சுமாா் 7 கிலோ மெத்தம்பெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டது. இவ்வழக்கிலும் கைது செய்யப்பட்ட ஒருவருக்குச் சொந்தமான ரூ. 1.05 கோடி மதிப்புள்ள அசையா சொத்துகளை முடக்கியிருப்பதாக மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனா்.