போதைப் பொருள் விற்றவா் கைது
ஆம்பூா் அருகே தடை செய்யப்பட்ட போதைப் பொருள் விற்பனை செய்தவா் கைது செய்யப்பட்டாா்.
துத்திப்பட்டு பகுதியில் உமா்ஆபாத் காவல் நிலைய போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது அங்குள்ள பெட்டிக் கடையில் போதைப் பொருள் விற்பனை செய்யப்படுவது தெரியவந்தது. அதன்பேரில் போலீஸாா் சோதனை செய்ததில் போதைப் பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தன. இதுதொடா்பாக ராஜசேகா் (43) என்பவரை கைது செய்து, பதுக்கி வைக்கப்பட்டிருந்த போதைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.