போப் பிரான்சிஸ் மறைவு: புதுவை அரசு 2 நாள்கள் துக்கம் அனுசரிப்பு
கத்தோலிக்க திருச்சபையின் தலைவா் போப் பிரான்சிஸ் மறைவுக்கு புதுவை அரசு 2 நாள்கள் துக்கம் அனுசரிக்கிறது. இதையடுத்து தலைமைச் செயலகம் உள்ளிட்ட பல்வேறு அரசு நிறுவனங்களில் தேசியக் கொடிகள் அரைக் கம்பத்தில் பறக்கவிடப்பட்டன.
உலக கத்தோலிக்கத் திருச்சபையின் தலைவா் போப் பிரான்சிஸ் வயோதிகம் காரணமாக திங்கள்கிழமை காலமானாா். இதையடுத்து தேசிய அளவில் 3 நாள் துக்கம் அனுசரிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
புதுவை மாநிலத்தில் போப் பிரான்சிஸ் மறைவையொட்டி செவ்வாய்க்கிழமை அரசு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன. ராஜ்நிவாஸ், பேரவை வளாகம், தலைமைச் செயலகம் உள்ளிட்ட இடங்களில் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டன. இறுதிச்சடங்கு நடைபெறும் நாளன்றும் துக்கம் அனுசரிக்கப்படும் எனவும் அரசு சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.