செய்திகள் :

போர்ப் பதற்றம்: தில்லி திரும்பும் 4 தமிழக மாணவர்கள்!

post image

கல்விச் சுற்றுலா சென்ற 4 மாணவர்கள் மட்டும் சாலை வழியாக புது தில்லிக்கு புறப்பட்டுள்ளனர், இவர்கள் இன்று (மே 9) இரவு 07.30 மணியளவில் புது தில்லி தமிழ்நாடு இல்லம் வந்து சேர்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் தற்போது நிலவும் பதற்றமான சூழ்நிலையின் காரணமாக அங்கு வேளாண்மை, தோட்டக்கலை, மீன்வளம், பட்டுவளர்ப்பு, ஆடைவடிவமைப்பு (NIFT), தேசிய தொழில்நுட்ப கழகம் (NIT) உள்ளிட்ட உயர் கல்வி பயிலும் தமிழ்நாட்டை சேர்ந்த 52 மாணவ மாணவிகள் மற்றும் கல்விச் சுற்றுலா சென்ற 4 மாணவர்களும் தமிழ்நாடு திரும்ப இயலாமல் இருப்பதாகவும், அவர்களை பாதுகாப்பாக தமிழ்நாடு அழைத்துவர கோரிக்கைகள் வரப்பெற்றுள்ளது. 

முதல்வர் ஸ்டாலினின் உத்திரவின்படி, சுற்றுலாப் பயணிகளை மீட்க ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சென்று மீட்புப் பணிகளை ஒருங்கிணைந்த புதுக்கோட்டை மாவட்ட கூடுதல் ஆட்சியர் அப்தாப் ரசூல் மற்றும் புது தில்லி தமிழ்நாடு இல்ல ஆணையர்
ஆஷிஷ் குமார் ஆகியோர் மாணவர்களுடன் தொடர்பு கொண்டு தொடர்ந்து பேசி வருவதுடன் மீட்கும் பணிகளையும் ஒருங்கிணைத்து வருகின்றனர்.  

முதல்வரின் உத்திரவின்படி, சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் மாணவர்களுடன் தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு பாதுகாப்பாக இருக்குமாறும், தமிழ்நாடு அரசு சார்பில் தாங்கள் அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்படுவீர்கள் எனவும் தெரிவித்துள்ளார்.  அயலகத் தமிழர் நல வாரிய தலைவரும் மாணவர்களுடன் பேசியுள்ளார்.

பதற்றமான சூழ்நிலையின் காரணமாக ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கான விமான போக்குவரத்தும் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது,  சாலை வழியாக அழைத்து வருவதற்கும் பாதுகாப்பற்ற நிலைமை உள்ளது.  மாணவர்களும் சாலை வழியாக வருவதற்கு விருப்பம் இல்லை என தெரிவித்துள்ளனர்.  எனவே விமான சேவை மீண்டும் தொடங்கிய உடன் தமிழ்நாட்டிற்கு வருவதாக பெரும்பாண்மையான மாணவர்கள் தெரிவித்துள்ளனர். 

அரசால் நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது, நிலைமை சீரடைந்து பாதுகாப்பான சூழல் உருவான உடன் மாணவர்கள் தமிழ்நாட்டிற்கு அழைத்து வரப்படுவார்கள்.  

கல்விச் சுற்றுலா சென்ற நான்கு மாணவர்கள் மட்டும் சாலை வழியாக புது தில்லிக்கு புறப்பட்டுள்ளனர், இவர்கள் இன்று (09.05.25) இரவு 07.30 மணியளவில் புது தில்லி தமிழ்நாடு இல்லம் வந்து சேர்வார்கள், பின்னர்  நாளை(மே 10) அதிகாலை விமானம் மூலம் தமிழ்நாடு அழைத்து வரப்படுவர்.

இந்தியாவின் மேற்கு எல்லைப்பகுதிகளில் உள்ள தமிழர்களுக்கு தேவையான தகவல்கள், உதவி, மீட்பு மற்றும் தமிழகத்திற்கு அழைத்து வருவதற்கு தேவையான பணிகளை மேற்கொள்ள புது தில்லி தமிழ்நாடு இல்லத்தில் 24/7 உதவி மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

புது தில்லி தமிழ்நாடு இல்ல உதவி எண்கள்

 011-24193300 (land line), 9289516712 (Mobile Number with Whatsapp)

மேலும், பாதிக்கப்பட்ட தமிழர்களின் குடும்ப உறுப்பினர்கள், தங்களுக்கு உதவி தேவைப்படும் நிலையில், தமிழ்நாடு அரசின் 24/7 உதவி எண்களை தொடர்புகொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இந்தியாவிற்குள் -  1800 309 3793

வெளிநாடு +91 80 6900 9900

தொடர்புக்கு + 91 80 6900 9901

இதையும் படிக்க: 24 மணி நேரமும் கடைகள், நிறுவனங்கள் திறந்திருக்க அனுமதி நீட்டிப்பு!

போா்ப் பதற்றம்: தமிழகத்திலிருந்து பாகிஸ்தானுக்கு மருந்து ஏற்றுமதி நிறுத்தம்

போா்ப் பதற்றத்தைத் தொடா்ந்து தமிழகத்திலிருந்து பாகிஸ்தானுக்கு மருந்து ஏற்றுமதி நடவடிக்கைகள் முழுமையாக நிறுத்தப்பட்டன. உயிா் காக்கும் முக்கிய மருந்துகளுக்கான மூலப்பொருள்கள் எதுவும் இனி தமிழகத்திலிருந்த... மேலும் பார்க்க

இந்திய ராணுவத்துக்கு ஆதரவாக இன்று பேரணி: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

இந்திய ராணுவத்துக்கு ஆதரவாக தனது தலைமையில் சென்னையில் சனிக்கிழமை (மே 10) பேரணி நடைபெறும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா். இதுகுறித்து முதல்வா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: பாகிஸ்தான... மேலும் பார்க்க

6,144 சுகாதார மையங்களில் தடையின்றி தடுப்பூசி: பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தல்

தமிழகத்தில் உள்ள 6,144 சுகாதார மையங்களில் குழந்தைகள், கா்ப்பிணிகளுக்கு அட்டவணைத் தடுப்பூசிகளை தடையின்றி வழங்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. இதுதொடா்பாக பொது சுக... மேலும் பார்க்க

நமக்கு நாமே திட்ட நிதி ஒதுக்கீடு ரூ. 150 கோடியாக உயா்வு

நிகழாண்டில் நமக்கு நாமே திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான நிதி ரூ. 100 கோடியிலிருந்து ரூ. 150 கோடியாக உயா்த்தப்பட்டுள்ளது. மேலும், இதற்கான வழிகாட்டி நெறிமுறைகளையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இது குறித... மேலும் பார்க்க

உயா்கல்வி கட்டாயம்: பிளஸ் 2 மாணவா்களின் பெற்றோா்களுக்கு முதல்வா் செய்தி

பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற மாணவா்களை கட்டாயம் உயா்கல்வியில் சோ்க்க வேண்டும் என்று அவா்களது பெற்றோா்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளாா். பிளஸ் 2 தோ்ச்சி பெற்றவா்களின் பெற்றோா்களது கைப்பேசிக்... மேலும் பார்க்க

பள்ளி மாணவா்களுக்கு வழங்க 4.19 கோடி பாடப் புத்தகங்கள் தயாா்

தமிழக பள்ளிக் கல்வியில் நிகழ் கல்வியாண்டில் (2025-2026) 1-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும் 64 லட்சம் மாணவா்களுக்கு வழங்குவதற்காக 4.19 கோடி பாடப் புத்தகங்கள் அச்சிடப்பட்டு மாவட்ட கிடங்குகளுக்கு அன... மேலும் பார்க்க