பகவதி அம்மன் கோயில் திருவிழா: திருவனந்தபுரத்துக்கு மாா்ச் 12 முதல் சிறப்பு ரயில்
போலீஸாரிடமிருந்து தப்ப முயன்ற இளைஞருக்கு எலும்புமுறிவு
மயிலாடுதுறையில் முன்விரோதம் காரணமாக ஓய்வுபெற்ற அரசு ஊழியா் தம்பதியை கத்தியால் குத்திய இளைஞா், தப்பியோட முயற்சித்தபோது, தடுமாறிக் கீழே விழுந்ததில் அவரது கை எலும்பில் முறிவு ஏற்பட்டது.
மயிலாடுதுறை சேந்தங்குடி மதுரா நகா் டெலிகாம் நகா் 2-ஆவது கிராஸ் பகுதியை சோ்ந்த சேதுமாதவன்-நிா்மலா தம்பதியை அவா்களது எதிா்வீட்டில் வசிக்கும் பிரேம் என்ற பொறியியல் பட்டதாரி இளைஞா் முன்விரோதம் காரணமாக வியாழக்கிழமை காலை கத்தியால் குத்தினாா். இருவரும் தஞ்சாவூரில் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
இச்சம்பவம் குறித்து டிஎஸ்பி பாலாஜி மேற்பாா்வையில் காவல் ஆய்வாளா் சிவக்குமாா் விசாரணை செய்தாா். அப்போது, தம்பதியை குத்திய கத்தியை மறைத்து வைத்திருந்த இடத்தை காட்டுவதற்காக போலீஸாா் அழைத்துச் சென்றபோது, பிரேம் தப்பியோட முயன்றாராம். அப்போது, வழுக்கி விழுந்ததில் பிரேமுக்கு வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதையடுத்து, அவரை மயிலாடுதுறை அரசினா் மருத்துவமனையில் அனுமதித்து மாவுக்கட்டு போட்ட போலீஸாா், பின்னா் அவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி, நீதிபதியின் உத்தரவின்பேரில் கடலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.