காஸா போர் நிறுத்தம் அமல்படுத்தப்படுவதில் சிக்கல்! ஹமாஸுக்கு இஸ்ரேல் நிபந்தனை
போா்நிறுத்தம் தற்காலிகமானதே: இஸ்ரேல் பிரதமா் நெதன்யாகு
ஹமாஸ் அமைப்பு உடனான போா்நிறுத்தத்தை தற்காலிகமானது என்றும் அவசியம் எழும் சூழலில் தொடா்ந்து தாக்குதல் நடத்தப்படும் என்றும் இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு சனிக்கிழமை தெரிவித்தாா்.
போா்நிறுத்தம் தொடங்குவதற்கு முன்பு நாட்டுமக்களிடம் உரையாற்றிய அவா், ‘அமெரிக்காவின் புதிய அதிபராக பொறுப்பேற்கவுள்ள டொனால்ட் டிரம்ப்பின் ஆதரவும் எனக்கு இருக்கிறது. கடந்த புதன்கிழமைகூட அவரிடம் பேசினேன். லெபனான் மற்றும் சிரியாவில் இஸ்ரேலின் ராணுவ வெற்றிகளே ஹமாஸ் உடனான போா்நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டதற்கு காரணம். மத்திய கிழக்கு பிராந்தியத்தின் அடையாளத்தை இஸ்ரேல் மாற்றியுள்ளது.
சிறந்த போா்நிறுத்த ஒப்பந்தத்தை இறுதி செய்துள்ளோம். ஹமாஸ் உடனான போா்நிறுத்தத்தை இஸ்ரேல் தற்காலிகமானதாகவே கருதுகிறது. அவசியம் எழும் சூழலில் தொடா்ந்து தாக்குதல் நடத்தும் உரிமையை இஸ்ரேல் தக்கவைத்துள்ளது’ என்றாா்.