அண்ணா பல்கலை. மாணவி விவகாரம்: `காவல்துறை மீது சந்தேகம்...' - கம்யூனிஸ்ட் கட்சி க...
மகனுடன் கிறிஸ்துமஸ் கொண்டாடிய சிவகார்த்திகேயன்!
நடிகர் சிவகார்த்திகேயன் தனது மகன் குகேஷுடன் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடியுள்ளார்.
சின்ன திரையிலிருந்து வந்த சிவகார்த்திகேயன் வெள்ளித்திரையில் முன்னணி நடிகர்களில் ஒருவராக உள்ளார். சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அமரன் திரைப்படம் 300 கோடிகளுக்கும் மேல் வசூலித்தது.
தனது பட வரிசையில் அதிக வசூல் ஈட்டிய திரைப்படமாக அமரன் படம் மாறியுள்ளது.
இதனைத் தொடர்ந்து இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இதனையடுத்து சுதா கொங்கரா, சிபி சர்க்கரவர்த்தி ஆகியோர் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.
இதையும் படிக்க: விடாமுயற்சி முதல் பாடல்: அதிகாரபூர்வ அறிவிப்பு!
இதனிடையே, சிவகார்த்திகேயன் அமரன் பட பாத்திரத்தில் ராணுவ உடை அணிந்து, சமையலறையில் இருந்த தனது மனைவிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விடியோ 107 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து சாதனைப் படைத்தது.
இந்த நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் தனது மகன் குகேஷுடன் கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாடியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்களையும் அவர் வெளியிட்டுள்ளார்.
இப்புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துவருவதுடன், சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.