சாலையில் சுற்றித் திரிந்த மாடுகள்: உரிமையாளா்களுக்கு அபராதம்
மகன் இழப்பால் ஏற்பட்ட சோசகம் - கோவையில் விபரீத முடிவு எடுத்த கணவன் - மனைவி
சிவகாசி பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரின் மனைவி வத்சலா. இவர்கள் காதலித்து திருணம் செய்துள்ளனர். இந்த தம்பதி கோவை வேடபட்டி பகுதியில் வசித்து வந்தனர்.
இவர்களுக்கு ஏழு வயதில் ஒரு மகன் இருந்தார். இந்நிலையில் கடந்த 2 ம் தேதி இவர்கள் காந்திபுரம் பகுதியில் உள்ள அம்பிகா லாட்ஜில் அறை எடுத்து தங்கி உள்ளனர்.
நேற்று அறையை காலி செய்ய ஹோட்டல் ஊழியர் கதவை தட்டியுள்ளார். ஆனால் கதவு திறக்கவில்லை. இதையடுத்து மாற்று சாவியை கொண்டு அறையை திறந்து பார்த்த போது வாயில் நுரை தள்ளியவாறு இருவரும் சடலமாக இருந்தனர். இதுகுறித்து காட்டூர் காவல்நிலையத்துக்கு தகவல் அளிக்கப்பட்டது.
அவர்கள் சம்பவ இடத்துக்கு சென்று கணவன், மனைவியின் உடல்களை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அதில் அவர்களின் 7 வயது மகன் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளார். இதில் கணவன், மனைவி இருவரும் மனமுடைந்துள்ளனர்.
அதன் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து காட்டூர் காவல் துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY