அவிநாசிலிங்கேஸ்வரர் கோயில் தேர்த் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
மகரம்: `கவனம்; உடல்நல அக்கறை நிச்சயம் தேவை' - ராகு கேது தரும் பலன்கள்
ஏப்ரல் 26 முதல் (வாக்கிய பஞ்சாங்கப்படி)உங்கள் ராசிக்கு 2-ம் இடத்தில் அமர்ந்து பலன் தரப்போகிறார் ராகு பகவான். கேது பகவான், உங்கள் ராசிக்கு 8-ம் இடத்தில் நின்று பலன் தருகிறார். அனுபவ அறிவைத் தருவதாகவும், சில விஷயங்களில் சாதிக்க வைப்பதாகவும் அமையும்.
ராகு பகவான் தரும் பலன்கள்
1. வாக்கு ஸ்தானத்தில் ராகு நுழைந்திருப்பதால், சங்கடங்களில் சிக்காதபடி சமயோசிதமாகப் பேசவேண்டும். நீங்கள் நல்லதைச் சொல்லப் போக, அதைச் சிலர் வேறுவிதமாகப் புரிந்து கொள்வார்கள். உங்களின் முன்கோபத்தால் சிலரின் நட்பை இழக்க வேண்டியது வரும்.
2. பத்திரங்களில் கையெழுத்திடும் போது கவனம் தேவை. யாருக்கவும் ஜாமீன் கையெழுத்திடவேண்டாம். வழக்குகளில் இழுபறியான நிலை ஏற்படும். திடீர்ப் பயணங்களால் லேசாக உடல்நிலை பாதிக்கும்.
3. முக்கிய வேலைகளை நீங்களே முன்னின்று முடிப்பது நல்லது. மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் உட்கொள்ளாதீர்கள். உங்களிடம் கடன் வாங்கி ஏமாற்றியவர்கள், இனி திருப்பித் தருவார்கள்.

4. பிள்ளைகளின் பிடிவாதக் குணம் மாறும். மகள் கல்யாணம் சீரும் சிறப்புமாக நடைபெறும். அவரின் மனதுக்கினிய மணமகன் அமைவார். மகனின் உயர் கல்வியில் இருந்துவந்த தடைகள் விலகும். சிலர் வீட்டை விரிவுபடுத்திக் கட்டுவீர்கள்.
5. வியாபாரிகள், நஷ்டத்தைத் தவிர்க்க புதுவித யோசனைகளைச் செயல்படுத்துவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரி ஆதரவு தருவார். வெளிநாட்டுத் நிறுவனங்களில் இருந்து புது வாய்ப்புகள் வரும்.கலைத்துறையினருக்கும் புதிய வாய்ப்புகள் தேடி வரும்.
கேது பகவான் தரும் பலன்கள்
6. கேது உங்களின் ராசிக்கு எட்டில் வந்து அமர்கிறார். முடிவுகள் எடுப்பதில் தடுமாற்றம் வரும். மற்றவர்களின் விஷயங்களில் தேவையின்றி மூக்கை நுழைக்காதீர்கள். செல்போனில் பேசிக் கொண்டு வாகனங்களை இயக்கவேண்டாம். அலைச்சலும், அடிமனதில் இனம்புரியாத அச்சமும் இருக்கவே செய்யும்.
7. எந்த வகையிலும் சட்டத்துக்குப் புறம்பான செயல்களில் ஈடுபட வேண்டாம். கணவன் மனைவிக்குள் விட்டுக்கொடுத்துப் போவது நல்லது. சிலருக்குச் சிறுநீரகத் தொற்று, பைல்ஸ் பிரச்னை போன்ற சிரமங்கள் ஏற்படலாம். வெளிவட்டாரத்தில் பொறுமை யைக் கடைப்பிடிப்பது நல்லது. வார்த்தைகளில் கவனம் தேவை. உறவினர்கள் சிலர், உங்களின் நிலைமையை அறியாமல், உதவி கேட்டு வருவார்கள்.

8. வியாபாரத்தில் ஓரளவு லாபம் உண்டு. புது முயற்சிகளைச் சற்றுத் தள்ளிப் போடவும். உத்தியோகத்தில் வேலைச்சுமை உண்டு. அதிகாரிகளின் அறிவுரைக்குச் செவிசாய்ப்பது நல்லது. வீண் விமர்சனங்கள் வேண்டாம்.
9. நாகாபரணத்துடன் அம்மன் அருளும் ஆலயங்களுக்குச் சென்று வழிபட்டு வரலாம். ராகு காலத்தில் அருகிலுள்ள துர்கை அம்மன் கோயிலுக்குச் சென்று விளக்கேற்றி வழிபடுங்கள். அன்னதானத்துக்கு பங்களிப்பை வழங்குங்கள். நல்லது நடக்கும்.