ரூ.56,000 கோடி கடனை முன்கூட்டியே செலுத்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம்!
மகளிர் டி20, ஓடிஐ தரவரிசை: ஸ்மிருதி மந்தனா முன்னேற்றம்!
மகளிர் டி20, ஒருநாள் போட்டிக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் துணைக் கேப்டன் ஸ்மிருதி மந்தனா ஆஸ்திரேலியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிக்களுக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசையில் முதல் 3 இடங்களுக்கு முன்னேற்றம் பெற்றுள்ளார்.
பெர்த்தில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் 105 ரன்கள் விளாசியதுடன் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டி20 போட்டியில் 54 ரன்கள் விளாசி அசத்தினார்.
இதையும் படிக்க..:டெஸ்ட்டில் சாதனை படைத்த பாட் கம்மின்ஸ்!
இதனால், ஒருநாள் தரவரிசையில் 2-வது இடத்தையும் டி20-யில் 3-வது இடத்தையும் பிடித்து அசத்தியுள்ளார்.
டி20 தரவரிசையில் மந்தனாவைத் தவிர்த்து இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் 1 இடம் முன்னேறி 11 வது இடத்தையும், ஜேமிமா ரோட்ரிக்ஸ் 6 இடங்கள் முன்னேறி 15-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.
ஒருநாள் தரவரிசையில் ஆஸ்திரேலியாவின் ஆஷ்லே கார்ட்னெர் 16வது இடத்தையும், கேப்டன் டாஹ்லியா மெக்ராத் 24-வது இடத்தையும், சதம் விளாசிய சதர்லேண்ட் 29-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.
இதையும் படிக்க..: 423 ரன்கள் வித்தியாசத்தில் நியூஸி. இமாலய வெற்றி: விடைபெற்றார் டிம் சௌதி!