செய்திகள் :

மகாநதி தொடரில் முக்கிய நடிகர் மாற்றம்!

post image

மகாநதி தொடரில் பிரதான பாத்திரத்தில் நடித்து வரும் நடிகர் ஒருவர் மாற்றப்பட்டுள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மகாநதி தொடர், கடந்த 2023 ஜனவரி முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இத்தொடர் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

பிரவீன் பென்னட் இயக்கி வரும் இத்தொடரில் லஷ்மிபிரியா, சுவாமிநாதன், ருத்ரன் பிரவீன், ஸ்வேதா , கம்ருதீன், பேபி காவியா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். டிஆர்பியிலும் இத்தொடர் முன்னணியில் உள்ளது.

இந்தத் தொடருக்கான திரைக்கதை, வசனத்தை பிரியா தம்பி எழுதி வருகிறார். இவரின் திரைக்கதைக்கு ரசிகர்கள் மத்தியில் எப்போதும் நல்ல வரவேற்பு உண்டு.

அந்தவகையில், தந்தையை இழந்த 4 சகோதரிகள் சமூகத்தில் எதிர்கொள்ளும் சவால்களை மையமாகக் கொண்டும் சகோதரிகளுக்கும் அவர்களது கணவர்களுக்கு இடையே நடக்கும் நிகழ்வுகளை மையப்படுத்தியும் இத்தொடர் எடுக்கப்பட்டு வருகிறது.

கார்த்திகேயன்

இந்த நிலையில், இந்தத் தொடரில் ராகவ் பாத்திரத்தில் நடித்து வந்த சஞ்சய் மோகன் மாற்றப்பட்டுள்ளார். இனி வரும் காலங்களில் அந்தப் பாத்திரத்தில் நடிகர் கார்த்திகேயன் நடிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் கார்த்திகேயன் கனா காணும் காலங்கள் தொடரில் நடித்து பிரபலமானவர். இதைத் தவிர இவர், யூடியூபில் நிறைய குறும்படங்களிலும் நடித்துள்ளார்.

இதையும் படிக்க: ரூ. 500 கோடி வசூலித்தும் ஏமாற்றத்தைக் கொடுத்த கூலி!

An actor playing a lead role in the Mahanadi series has been replaced.

ஓடிடியில் மதராஸி எப்போது?

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மதராஸி படத்தின் ஓடிடி வெளியீடு குறித்த தகவல் தெரியவந்துள்ளது.ஏ.ஆர். முருகதாஸ் இயக்கிய மதராஸி படத்தில் சிவகார்த்திகேயன், துப்பாக்கி படத்தில் வில்லனாக நடித்து ப... மேலும் பார்க்க

மகனை கிண்டல் செய்த தனுஷ்..! வெட்கத்தில் தலைகுனிந்த லிங்கா!

நடிகர் தனுஷ் தனது மகன் லிங்காவை இட்லி கடை இசை வெளியீட்டு விழாவில் கிண்டல் செய்தது சமூக வலைதளத்தில் கவனம் ஈர்த்துள்ளது. நடிகர் தனுஷ் இட்லி கடை படத்தினை இயக்கி நடித்துள்ளார். நடிகை நித்யா மெனன், சமுத்தி... மேலும் பார்க்க

அன்னம் - கயல் - மருமகள் தொடர்களின் மகா சங்கமத்தில் இணையும் நடிகை மான்யா!

அன்னம் - கயல் - மருமகள் தொடர்களின் மகாசங்கமத்தில் வானத்தை போல நடிகை மான்யா இணையவுள்ளார். இவரின் வருகையால் மகாசங்கமத்தில் பல புதிய திருப்பங்கள் உண்டாகும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள... மேலும் பார்க்க

கில்லி பட வசூலை முறியடிக்குமா குஷி?

நடிகர் விஜய் நடித்த குஷி திரைப்படம் செப்.25ஆம் தேதி மறுவெளியீடாகுமென அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. நடிகர் விஜய்யின் திரைப் பயணத்தில் மிக முக்கியமான படமாக குஷி திரைப்படம் இருக்கிறது. எஸ்.ஜே.சூ... மேலும் பார்க்க

இதயம் தொடரில் நடிக்கும் சிறகடிக்க ஆசை நடிகர்!

சிறகடிக்க ஆசை தொடரில் முக்கிய பாத்திரத்தில் நடித்து வரும் நடிகர் திவாகர், இதயம் தொடரில் நடிக்கவுள்ளார். இவரின் வருகையால் இதயம் தொடரில் பல முக்கிய திருப்பங்கள் ஏற்படும் என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்... மேலும் பார்க்க

பிரதமர் மோடி பிறந்த நாளுக்கு பரிசு அனுப்பிய மெஸ்ஸி! என்ன தெரியுமா?

உலகின் தலைசிறந்த கால்பந்து வீரரான லியோனல் மெஸ்ஸி, பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளையொட்டி அவருக்கு சிறப்பு பரிசு ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.உலகின் புகழ்பெற்ற கால்பந்து நட்சத்திரமும், ஆர்ஜென்டீனா அண... மேலும் பார்க்க