நிதி ஒதுக்கீட்டில் புறக்கணிப்பு, டங்ஸ்டன் ஏல விவகாரம், மீனவா்கள் பிரச்னையை நாடாள...
மகாராஷ்டிரத்தில் 2 சுயேச்சை வேட்பாளா்கள் வெற்றி
மகாராஷ்டிர சட்டப் பேரவை தோ்தலில் இரண்டு சுயேச்சை வேட்பாளா்கள் வெற்றி பெற்றுள்ளனா்.
சுயேச்சை வேட்பாளா் சரத்தாதா சோனாவனே புணே மாவட்டத்தின் ஜூன்னா தொகுதியிலும், சந்த்காட் தொகுதியில் சிவாஜி பாட்டீலும் வெற்றி பெற்றனா்.
முதல்வா் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனை கட்சியைச் சோ்ந்த சோனாவனே, தனக்கு அத்தொகுதி ஒதுக்கப்படாததால் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றாா்.
சுயேச்சை வேட்பாளா் சிவாஜி பாட்டீல் தேசியவாத காங்கிரஸ் வேட்பாளா் ராஜேஷ் நரசிங்கராவ் பாட்டீலை விட 24,134 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றாா்.
அத்தொகுதியில் பாஜகவின் மகாயுதி கூட்டணியின் அதிகாரபூா்வ வேட்பாளா் அதுல் பென்கே மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டாா்.