செய்திகள் :

மகாராஷ்டிரம்: திடீர் முடி உதிர்வு..வழுக்கையாகும் நிலை! பொதுமக்கள் அச்சம்!

post image

மகாராஷ்டிர மாநிலத்தின் புல்தான மாவட்டத்தில் உள்ள 6 கிராமங்களின் பொதுமக்கள் சிலருக்கு திடீரென வழக்கத்தை விட அதிகமான தலைமுடி உதிர்ந்து, வழுக்கையாகும் நிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

அம்மாவட்டத்தின் ஷேகான் தாலுக்காவிற்கு உள்பட்ட பாண்ட்கான், கல்வாட், கதோரா ஆகிய கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களுக்கு வழக்கத்தை விட அதிகமான தலைமுடி கொட்டுவதினால் வழுக்கை ஆகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், அந்த கிராமவாசிகள் கடும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

அந்த கிராமங்களில் வசிக்கும் சுமார் 55 பேருக்கு, உச்சந்தலையில் அரிப்பு ஏற்பட்டு, பின்னர் நாளடைவில் முடி உதிரத் துவங்கி 3 முதல் 4 நாள்களில் அவர்களது தலை வழுக்கையாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக உள்ளூர் சுகாதாரத் துறை, இந்த திடீர் முடியுதிர்விற்காக காரணத்தை கண்டறிய ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த திடீர் பிரச்சனைக்கான காரணம் என்னவென்று கண்டுபிடிக்கப்படாத நிலையில், பாதிக்கப்பட்டவர்கள் சில குறிப்பிட்ட நிறுவனங்களின் ஷாம்பூக்களை பயன்படுத்தியதினால் ஏற்பட்டிருக்கக் கூடும் என சந்தேகிக்கப்படுகிறது.

இதையும் படிக்க: தலையில் பாய்ந்த துப்பாக்கி குண்டு: ஆம் ஆத்மி எம்எல்ஏ பலி! விபத்தா? கொலையா?

இருப்பினும், அவர்களை பரிசோதித்த தோல் மருத்துவர் ஒருவர் கூறியதாவது பாதிக்கப்பட்டவர்களில் 90 சதவிகத்திற்கும் மேலானோருக்கு தலையில் அரிப்பு இருப்பதாகவும் இது குளிர் காலத்தில் ஏற்படும் பூஞ்சைத் தொற்று போன்று உள்ளதாகவும் கூறினார்.

முன்னதாக, அந்த கிராமங்களில் இருந்து தண்ணீர் மாதிரிகளை சோதனைக்காக அதிகாரிகள் அனுப்பியதில், பொதுவாக மக்கள் பயன்படுத்தும் தண்ணீரில் 10 மில்லி கிராம் அளவில் மட்டுமே நைட்ரேட் எனும் ரசாயனப் பொருள் இருக்க வேண்டும். ஆனால், அங்குள்ள தண்ணீரில் 54 அளவில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும், அந்த தண்ணீரில் ஈயம் மற்றும் ஆர்சனிக் போன்ற நச்சு ரசாயனங்கள் உள்ளதாக என்பதை கண்டறிய தண்ணீரின் மாதிரிகள் புணேவிலுள்ள ஆய்வு கூடங்களுக்கு அனுப்பபட்டுள்ளதாகவும் அதன் முடிவுகள் 8 - 10 நாள்களில் கிடைத்துவிடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கத்தார் கவிஞர் முகம்மது அல் அஜாமி! கவிதைதான் குற்றம் - 11

நாடு: கத்தார்! உலகின் தனிநபர் பணக்கார நாடுகளில் ஒன்று. மக்கள் தொகை 2.2 மில்லியன்; ஆனால் குடிமக்கள் (citizens) 250,000 பேர் மட்டுமே! தோராயமாக 8 க்கு ஒருவர் மட்டுமே குடிமகன்/ குடிமகள்! இவர்களில் பாதிப் ... மேலும் பார்க்க

ரூ.3 கோடி மதிப்பிலான காண்டாமிருகக் கொம்புகள் பறிமுதல்! 4 பேர் கைது!

புது தில்லியில் காண்டாமிருகத்தின் கொம்புகளை பதுக்கிய 4 பேர் அம்மாநில காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர்.அம்மாநிலக் காவல் துறையினருக்கு கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் கடந்த ஜன.9 அன்று லாக்பட் ... மேலும் பார்க்க

முதல்முறையாக சிங்கப்பூர் அதிபர் இந்தியா வருகை!

கடந்த 10 ஆண்டுகளில் சிங்கப்பூர் நாட்டு அதிபர் முதல்முறையாக அரசுப்பயணமாக இந்தியா வருகிறார்.தென்கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூரின் அதிபர் தர்மன் சண்முகரத்தினம் வருகின்ற ஜன.14 அன்று அரசு முறைப்பயணமாக இந்தி... மேலும் பார்க்க

துப்பாக்கியால் சுட்ட மர்ம நபர்! படுகாயமடைந்த சிறுவன்!

புது தில்லியில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில் 15 வயது சிறுவன் படுகாயம் அடைந்துள்ளார்.வடகிழக்கு தில்லியின் வெல்கம் பகுதியின் பி-ப்ளாக்கில் உள்ள தனது வீட்டின் வாசலில் நேற்று (ஜன.... மேலும் பார்க்க

போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை: அரசாணை வெளியிட்டது தமிழக அரசு!

பொங்கல் திருநாளை முன்னிட்டு ஒரு லட்சத்து எட்டாயிரத்து நூற்றைந்து போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு 2024 ஆம் ஆண்டுக்கான சாதனை ஊக்கத்தொகை வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி 200 நாள்கள் ... மேலும் பார்க்க

கிராமவாசிகள் நோய்வாய்ப்பட தடை! எங்கு?

இத்தாலி நாட்டின் தெற்கு பகுதியிலுள்ள பெல்காஸ்ட்ரோ எனும் கிராமத்தில் உள்ளூர் மக்கள் நோய்வாய்ப்பட தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டின் கட்டன்சாரோ மாகாணத்திலுள்ள பெல்காஸ்ட்ரோ எனும் கிராமத்தின் மேயர் அண்ட... மேலும் பார்க்க