செய்திகள் :

மகாராஷ்டிரா அமைச்சரவையில் மூத்த அமைச்சர்களுக்கு கல்தா..? அதிருப்தியில் 11 தலைவர்கள்

post image

மகாராஷ்டிராவில் அமைச்சர்கள் நேற்று முன் தினம் நீண்ட இழுபறிக்கு பிறகு பதவியேற்றுக்கொண்டனர். அவர்களில் ஏற்கெனவே முந்தைய அரசில் அமைச்சர்களாக இருந்த 11 மூத்த தலைவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. இது பா.ஜ.க, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அஜித்பவாருடன் சகன் புஜ்பால்

பா.ஜ.கவில் மூத்த தலைவராக இருக்கும் சுதிர் முங்கந்திவாருக்கு மீண்டும் அமைச்சர் பதவி கொடுக்கப்படவில்லை. சுதிர் முங்கந்திவாருடன் நீண்ட ஆலோசனை நடத்திய பிறகுதான் அவரை அமைச்சர்கள் பட்டியலில் இருந்து நீக்கியதாகவும், அவருக்கு வேறு ஒரு முக்கிய பொறுப்பு கொடுக்கப்படும் என்றும் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்தார். ஆனால் தேவேந்திர பட்னாவிஸ் தன்னிடம் கலந்து ஆலோசிக்கவில்லை என்றும், அமைச்சர்கள் பதவியேற்ற அன்றுதான் அவரை சந்தித்ததாக குறிப்பிட்டார். அமைச்சர்கள் பட்டியலில் எனது பெயர் இருப்பதாகதேவேந்திர பட்னாவிஸ் மற்றும் மாநில பா.ஜ.க தலைவர் சந்திரசேகர் பவன்குலேயும் தெரிவித்தனர். ஆனால் கடைசி நேரத்தில் எனது பெயரை நீக்கிவிட்டனர் என்று சுதிர் முங்கந்திவார் குறைபட்டுக்கொண்டார்.

இது தவிர ரவீந்திர சவான், விஜய்குமார் ஆகியோரும் பா.ஜ.கவில் அமைச்சர் பதவி கிடைக்காதவர்கள் ஆவர். தேசியவாத காங்கிரஸ் கட்சியில் மூத்த தலைவராக இருக்கும் சகன் புஜ்பாலுக்கு மீண்டும் அமைச்சர் பதவி கொடுக்கப்படவில்லை. அவருக்கு ராஜ்ய சபை உறுப்பினர் பதவி கொடுப்பதாக அஜித்பவார் தெரிவித்தார். ஆனால் அதனை ஏற்காமல் சட்டமன்றத்தின் கூட்டத்தில் பங்கேற்காமல் நாசிக் திரும்பிவிட்டார். அதோடு தான் அதிருப்தியில் இருப்பதாகவும் குறிப்பிட்டார். இதே போன்று தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திலிப் வல்சே பாட்டீல், தர்மராவ் ஆகியோருக்கும் அமைச்சர் பதவி கிடைக்கவில்லை.

பட்னாவிஸ், ஷிண்டே, அஜித்பவார்

இதே போன்று சிவசேனா முன்னாள் அமைச்சர் விஜய் சிவ்தாரே கூறுகையில், "எனக்கு அமைச்சர் பதவி கிடைக்கவில்லை என்பதற்காக நான் கவலைப்படவில்லை. ஆனால் என்னை நடத்திய விதம் மிகவும் வருத்தம் அளிக்கிறது. எனக்கு 2.5 ஆண்டுகள் அமைச்சர் பதவி கொடுத்தாலும் நான் ஏற்றிருக்கமாட்டேன். தொண்டர்கள் ஒன்றும் அடிமைகள் கிடையாது. எனக்கு அமைச்சர் பதவி தேவையில்லை. என்னை நடத்திய விதம் தான் சரியில்லை. மகாராஷ்டிரா பீகாரை பின்பற்றி சாதி அடிப்படையில் செல்கிறது" என்றார். இலாகா ஒதுக்கீட்டிலும் கூட்டணி கட்சிகளிடையே மோதல் இருந்து வருகிறது.

மகாராஷ்டிராவில் 39 அமைச்சர்கள் பதவியேற்பு; 19 பேர் புதுமுகம்... முடிவுக்கு வந்த இழுபறி!

மகாராஷ்டிராவில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க கூட்டணி வெற்றி பெற்ற போதிலும் அரசு பதவியேற்பதிலும், அமைச்சர்கள் பதவியேற்பதிலும் இழுபறி நீடித்து வந்தது. நீண்ட இழுபறிக்கு பிறகு கடந்த 5-ம் தேதி புதிய அ... மேலும் பார்க்க

`உள்துறை, நிதித்துறை' சேர்த்து கேட்கும் ஷிண்டே; அமித் ஷாவுடன் பட்னாவிஸ், அஜித்பவார் ஆலோசனை!

மகாராஷ்டிராவில் கடந்த 5ம் தேதி முதல்வராக தேவேந்திர பட்னாவிஸ் பதவியேற்றுக்கொண்டார். துணைமுதல்வர்களாக ஏக்நாத் ஷிண்டே மற்றும் அஜித்பவார் ஆகியோர் பதவியேற்றுள்ளனர். ஏற்கெனவே சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெ... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா தேர்தல்: விலாஸ்ராவ் தேஷ்முக் வாரிசுகள் தந்தையின் கோட்டையை பிடிப்பார்களா..?

மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் ஏராளமான அரசியல் தலைவர்களின் வாரிசுகள் போட்டியிடுகின்றனர். உத்தவ் தாக்கரே, ராஜ்தாக்கரே மகன்கள் இத்தேர்தலில் போட்டியிடுகின்றனர். இதுதவிர உறவுகளே ஒருவரை எதிர்த்து ஒருவர் ... மேலும் பார்க்க