Ashwin : 'இந்தி தேசிய மொழி அல்ல; அலுவல் மொழிதான்' - மாணவர்கள் மத்தியில் அஷ்வின் ...
மகா கும்பமேளாவிற்காக கங்கையைத் தூர்வாருவது "சுற்றுச்சூழல் குற்றம்": அகிலேஷ்
பிரயாக்ராஜில் மகா கும்பமேளாவிற்காக கங்கையைத் தூர்வாருவது சுற்றுச்சூழல் குற்றம் என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் புதன்கிழமை தெரிவித்துள்ளார்.
12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகா கும்பமேளா பிரயாக்ராஜில் 2025 ஜனவரி 13 முதல் பிப்ரவரி 26 வரை நடைபெறுகிறது. உலகிலேயே மிகப்பெரிய மத வழிபாடான மகா கும்பமேளா நிகழ்ச்சி மிகவும் பிரசித்தி பெற்றது.
இந்த நிலையில் மகா கும்பத்திற்காகக் கங்கையைத் தூர்வாருதல் குறித்து கன்னௌஜ் எம்.பி. பகிர்ந்த எக்ஸ் பதிவு..
பிரயாக்ராஜில் கங்கையைத் தூர்வாருவது சுற்றுச்சூழல் குற்றமாகும். நதிகள் தனக்கான பாதைகளை உருவாக்குகின்றன என்பதற்கு வரலாறு சாட்சி. இந்த இயற்கையான ஓட்டம் ஆறுகளின் தொடர்ச்சிக்குத் தானாக உருவாக்கப்பட்ட பாதை. இந்த புவியியல் உண்மையை ஏற்று, நதிகளின் ஓட்டத்தை சீர்குலைப்பது சுற்றுச்சூழல் குற்றமாகும்.
கங்கையைத் தூர்வாரும் விடியோ பதிவு ஒன்றையும் அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
பிரயாக்ராஜ் மகா கும்பத்தின்போது கங்கையைத் தூர்வாருதலை நிறுவியதன் நோக்கம் சொந்த நபர்களுக்கு ஒப்பந்தம் கொடுத்து ஊழல் மூலம் அவர்களிடமிருந்து பணம் சம்பாதிப்பது மட்டுமே.
நதிகள் சங்கமிக்கும் இடத்தில் இயற்கைக்கு வழிவிடப்பட வேண்டும், தன்னிச்சையான செயல்களைச் செய்வதும், வலுக்கட்டாயமாக நீரோட்டத்தை மாற்றுவதும் பொருத்தமற்றது மற்றும் விரும்பத்தகாதது.
அவ்வாறு செய்வது கங்கையின் நீர் வாழ் உயிரினங்களின் உயிரியல் மற்றும் இயற்கை சுற்றுச்சூழல் சமநிலை ஆகியவற்றில் மோசமான விளைவை ஏற்படுத்தும் என்று அவர் கூறினார்.