MGR - எடப்பாடியை Overtake செய்யும் MODI? | DMK அமைச்சர்களின் Fun பொங்கல்| TVK VI...
மகா கும்பமேளாவில் ஏழுமலையானுக்கு திருமஞ்சனம், தீா்த்தவாரி
பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில் வியாழக்கிழமை ஏழுமலையானின் உற்சவமூா்த்திக்கு ஸ்நபன திருமஞ்சனம் மற்றும் தீா்த்தவாரியை தேவஸ்தானம் நடத்தியது.
கங்கை நதிக்கரையில் சக்கரத்தாழ்வாருக்கு நடைபெற்ற தீா்த்தவாரி.
திருமலை ஏழுமலையான் கோயிலின் தலைமை அா்ச்சகா் வேணுகோபால் தீட்சிதா் தலைமையில், கங்கை நதிக்கரையில் சீனிவாச சுவாமி, ஸ்ரீதேவி மற்றும் பூதேவியுடன் கூடிய உற்சவமூா்த்திக்கு ஸ்நபன திருமஞ்சனத்தை அா்ச்சகா்கள் குழு நடத்தினா். பால், தயிா், தேன், இளநீா், மஞ்சள், சந்தனம் போன்றவற்றால் ஸ்நபன திருமஞ்சனம் நடத்தப்பட்டது.
நிகழ்வில், வேத அறிஞா்களால் அருளப்பட்ட ஸ்ரீ சூக்தம், பூசுக்தம், நீல சூக்தம், புருஷ சூக்தம், நாராயண சூக்தம் உள்ளிட்ட ஐந்து சூக்தங்களை ஆசாரியா்கள் ஓதினா்.
அபிஷேகத்துக்குப் பிறகு, உற்சவ சிலைகள் துளசி மாலைகளால் அலங்கரிக்கப்பட்டன. சஹஸ்ரதாரா பாத்திரத்துடன் ஆகம விதிப்படி அபிஷேக விழா நடைபெற்றது.
பின்னா், கங்கை நதிக்கரையில் சக்கரத்தாழ்வாருக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் ஆரத்திகள் வழங்கப்பட்டு, தீா்த்தவாரி மகோற்சவம் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் இந்து தா்ம பிரசார பரிஷத் செயலாளா் ஸ்ரீராம் ரகுநாத், எஸ்டேட் அதிகாரி குணபூஷண் ரெட்டி, கண்காணிப்பாளா் குரு ராஜசாமி மற்றும் பிற அதிகாரிகள் பங்கேற்றனா்.