ரயில் பயணத்தில் மது அருந்தி தகராறு செய்த பயணி; கொடூரமாக தாக்கிய டிடிஆர் சஸ்பெண்ட...
மகா கும்பமேளாவில் பங்கேற்கும் பிரான்ஸ் நாட்டுப் பெண்!
மகா கும்பமேளாவில் பங்கேற்பதற்காக பிரான்ஸ் நாட்டிலிருந்து பாஸ்கல் என்ற பெண்மணி உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜ் நகருக்கு வந்துள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் வருகிற 13-ம் தேதி முதல் பிப்ரவரி 26-ம் தேதி வரை மகா கும்பமேளா நடைபெற உள்ளது. இந்தாண்டு கும்பமேளாவிற்கு 40 கோடி பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுபற்றி அவர் கூறும்போது,
மகா கும்பமேளாவிற்கு வந்துள்ளது எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. கும்பமேளா பற்றி நான் அதிகளவில் அறிந்திருக்கிறேன். இங்கு நிறைய யோகிகள், சாதுக்கள் மற்றும் இந்து மக்களைச் சந்தித்திருக்கிறேன். அவர்களை மீண்டும் சந்திப்பதற்காக வந்துள்ளேன். ஆன்மாவை சுத்தப்படுத்தும் புனிதத் தலம் இது.
இந்த கும்பமேளாவானது இந்தியாவின் பழமையான கலாசாரம் மற்றும் மத பாரம்பரியங்களை உலகளவில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக மாற்றும்.க இந்துத்துவா மற்றும் கடவுள் சிவன் மீதும் எனக்கு அதீத பக்தி உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
கும்பமேளாவை முன்னிட்டு பிரயாக்ராஜில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.