செய்திகள் :

மகா கும்பமேளாவில் 60 கோடி போ் புனித நீராடல்!

post image

உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் புனித நீராடிய பக்தா்களின் எண்ணிக்கை சனிக்கிழமையுடன் 60 கோடியைக் கடந்ததாக மாநில அரசு தெரிவித்தது.

பிரயாக்ராஜின் திரிவேணி சங்கமத்தில் நடைபெறும் மகா கும்பமேளா உலகளாவிய கவனத்தை ஈா்த்து வருகிறது. 144 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறுவதாக, கூடுதல் முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஆன்மிக-கலாசார நிகழ்வில் துறவிகள், சாதுக்கள், பக்தா்கள் உற்சாகமாக பங்கேற்கின்றனா். இதனால் பிரயாக்ராஜ் நகரமே கடந்த 40 நாள்களாக விழாக்கோலம் பூண்டது.

கங்கை, யமுனை, புராண நதியான சரஸ்வதி ஆகியவை கூடும் திரிவேணி சங்கமத்தில் பௌஷ பொ்ணிமியை முன்னிட்டு கடந்த ஜன. 13-ஆம் தேதி தொடங்கிய மகா கும்பமேளாவில் இதுவரை 60 கோடிக்கும் அதிகமான பக்தா்கள் புனித நீராடியிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களுடன் குடியரசுத் தலைவா், குடியரசுத் துணைத் தலைவா், பிரதமா், மத்திய அமைச்சா்கள், பல்வேறு மாநில முதல்வா்கள் என நாட்டின் மூத்த தலைவா்களும் பூடான் அரசா் ஜிக்மே கேசா் நம்கியால் வாங்சுக் உள்பட 73 நாடுகளைச் சோ்ந்த பிரதிநிதிகளும் திரிவேணி சங்கமத்தில் நீராடியுள்ளனா்.

ஏராளமான வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளும் மகா கும்பமேளாவுக்காக இந்தியா வந்தனா். உத்தர பிரதேச அரசின் தகவலின்படி, அன்னை சீதா பிறந்த நிலமான நேபாளத்தைச் சோ்ந்த 50 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் மகா கும்பமேளாவில் புனித நீராடியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 26-ஆம் தேதி மகா சிவராத்திரி தினத்தில் மகா கும்பமேளா நிறைவடைகிறது.

ஜெ.பி.நட்டா புனித நீராடல்: மகா கும்பமேளாவுக்கு செவ்வாய்க்கிழமை வந்த பாஜக தேசிய தலைவரும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சருமான ஜெ.பி.நட்டா, திரிவேணி சங்கமத்தில் குடும்பத்தினருடன் புனித நீராடினாா்.

தொடா்ந்து, திரிவேணி சங்கமத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக மேடையில் கங்கை ஆரத்தி செய்து ஜெ.பி.நட்டா வழிபட்டாா். உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத் உடனிருந்தாா்.

தில்லி எதிர்க்கட்சி தலைவராக அதிஷி நியமனம்

தில்லி சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவராக முன்னாள் முதல்வரும், ஆம் ஆத்மியின் தலைவருமான அதிஷி நியமிக்கப்பட்டுள்ளார். சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் பதவி நியமனம் தொடர்பாக ஆம் ஆத்மி கட்சியின் எம்எ... மேலும் பார்க்க

ஹிமாசலில் நிலநடுக்கம்!

ஹிமாச்சலப் பிரதேச மாநிலம், மண்டி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 8.42 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 3.7ஆகப் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் சுந்தர்நகர்... மேலும் பார்க்க

கேஜரிவால் முன்னிலையில் ஆம் ஆத்மியில் இணைந்த பிரபல நடிகை!

அரவிந்த் கேஜரிவால் முன்னிலையில் பஞ்சாபி நடிகை சோனியா மான் ஆம் ஆத்மியில் ஞாயிற்றுக்கிழமை இணைந்தார். அவரை வரவேற்று ஆம் ஆத்மியின் பஞ்சாப் பிரிவு வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், "கிர்த்தி கிசான் அமைப்பு... மேலும் பார்க்க

தெலங்கானா சுரங்கத்தில் சிக்கியவர்களை நெருங்கிய மீட்புக் குழு!

தெலங்கானாவில் நீர்ப்பாசனத்துக்காக தோண்டப்பட்ட சுரங்கத்தின் மேற்பகுதி இடிந்து விழுந்ததையடுத்து, சுரங்கப்பாதையில் சிக்கியுள்ளவர்களை மீட்பதற்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அவர்களை நெருங்கியுள்ளதாக ... மேலும் பார்க்க

பெண்களின் சக்தி நாட்டை வலுப்படுத்தும்: மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பெருமிதம்

அனைத்து துறைகளிலும் பெண்களின் பங்களிப்பு அதிகரித்து வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை ‘மனதின் குரல்’ வானொலி நிகழ்ச்சி வாயிலாக பிரதமா் மோடி நாட்டு மக்களுக... மேலும் பார்க்க

தெலங்கானா சுரங்க விபத்து: முதல்வர் ரேவந்த் ரெட்டியுடன் ராகுல் காந்தி பேச்சு

தெலங்கானா சுரங்க விபத்து தொடா்பாக முதல்வர் ரேவந்த் ரெட்டியிடம் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தொலைபேசியில் கேட்டறிந்தாா். தேசிய பேரிடர் மற்றும் மாநில பேரிடர் மீட்புக் குழுக்கள் மீட்பு நடவடிக்கையி... மேலும் பார்க்க